திருமணமான ஆண்களை காதலிக்காதீங்க... நான் நிறைய பட்டுட்டேன்... ரசிகைகளுக்கு பிரபல நடிகை வார்னிங்!

By

மும்பை: திருமணமான ஆண்களை காதலிக்க வேண்டாம் என்று நடிகை நீனா மாலிக் தெரிவித்துள்ளார்.

Recommended Video

திருமணமான ஆண்களை காதலிக்காதீங்க... நான் நிறைய பட்டுட்டேன்... ரசிகைகளுக்கு பிரபல நடிகை வார்னிங்! - வீடியோ

எண்பதுகளில், முன்னணி இந்தி நடிகையாக இருந்தவர் நீனா குப்தா. ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு இப்போது வயது 59.

இவர் பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் காதலித்து, திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். இவர்களுக்கு மஸாபா குப்தா என்ற மகள் இருக்கிறார்.

திருமணமான ஆண்கள்

பின்னர் டெல்லியை சேர்ந்த விவேக் மெஹ்ராவை திருமணம் செய்துகொண்ட நீனா, படங்களில் நடித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், திருமணமான ஆண்களை காதலிக்க வேண்டாம் என்று ரசிகைகளுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதை ஏராளமானோர் வரவேற்றுள்ளனர்.

காதல்ல விழுவீங்க

காதல்ல விழுவீங்க

அவர் அதில் கூறியிருப்பதாவது: 'என் மனைவியை பிடிக்கலைன்னு முதல்ல சொல்வாங்க. அவளோட அதிக நாள் வாழமுடியாதுன்னு அடுத்தால ஆரம்பிப்பாங்க. உடனே திருமணமானவர்னு தெரிஞ்சும் நீங்க காதல்ல விழுவீங்க. கொஞ்ச நாள் கழிச்சு, ஏன் அவங்களை பிரியலைன்னு கேட்பீங்க? 'இல்ல.. இல்ல.. குழந்தைங்க இருக்காங்க'ன்னு பதில் வரும். பிறகு ரகசியமா ரெண்டு பேரும் சுத்துவீங்க.

டைவர்ஸ் பண்ணலை

டைவர்ஸ் பண்ணலை

ஹாலிடே போய்ட்டு வருவீங்க. அங்க ஒண்ணா இருக்க வேண்டியிருக்கும். பிறகு அவரைத் திருமணம் செய்துக்கணும்னு தோணும். அதனால, நீங்க ஏன் இன்னும் டைவர்ஸ் பண்ணலைன்னு கேட்பீங்க. உடனே, அது அவ்வளவு ஈசியான விஷயமில்லை. சொத்து இருக்கு. பேங்க் அக்கவுண்ட் இருக்குன்னு சொல்வாங்க. நீங்க விரக்தி அடைஞ்சிருவீங்க.

பாதிக்கப்பட்டிருக்கேன்

பாதிக்கப்பட்டிருக்கேன்

அவரை பிரியலாம்னு முடிவெடுப்பீங்க. இதுதான் நடக்கும். அதனால சொல்றேன். திருமணமான ஆண்களை காதலிக்காதீங்க. நான் அதுல அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கேன். அதனாலதான் இதை சொல்றேன். அதை மட்டும் பண்ணிடாதீங்க' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிர்கர்கள் தங்கள் கமென்ட்களை தாறுமாறாகப் பதிவு செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X