அப்படி செய்வார்கள் மயங்கிடாதீங்க சி.எம் விஜய் சார்.. பிரபலம் இப்படி ஒரு அட்வைஸை போட்டிருக்காரே

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அநேகமாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனது எக்ஸ் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை முக்கியத்துவத்தை பெற்றது. அதற்கு காரணம் விஜய். நடிகர் விஜயகாந்த் மாதிரி முதல் தேர்தலில் 8 விழுக்காடு தேர்தலை வாங்கிவிடுவாரா?; இரட்டை இலக்கங்களில் அவர் தொகுதிகளை வென்றுவிடுவாரா என்று எல்லோருமே சந்தேகப்பட்டார்கள். அந்த சந்தேகத்தை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டார் அவர். விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது கட்சி மொத்தம் 108 தொகுதிகள் வென்றிருக்கிறது.

Don t Get Swayed CM Sir Bismi s Viral Advice to Vijay After Poll Victory
Photo Credit:

அடுத்தக்கட்ட நகர்வு என்ன?: திமுகவைவிடவும் தவெக அதிக தொகுதிகளை வென்றாலும்; பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளை வெல்ல முடியவில்லை. எனவே விஜய்யால் ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகமும் சிலரிடம் எழுந்திருக்கிறது. ஆனால் பெர்பும்பான்மைக்கு இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே வேண்டும் என்பதால் கண்டிப்பாக அது விஜய்க்கு கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. அநேகமாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவு செல்லும் என தெரிகிறது.

Also Read
Kara Day 5 Box Office - தனுஷின் கர 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை மோசம்
Kara Day 5 Box Office - தனுஷின் கர 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை மோசம்

வீட்டில் கொண்டாட்டம்: விஜய்யின் இந்த வெற்றி தமிழ்நாட்டு அரசியலையே மாற்றி வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றிருக்கிறது. அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதிதான் வரும் காலங்களில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இனிமேல் தமிழ்நாட்டு அரசியலில் உதயநிதி Vs விஜய் என்ற போட்டி அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக தொடங்கவிருக்கிறது. இதற்கிடையே விஜய்யின் வெற்றி அவரது வீட்டில் பெரிய கொண்டாட்டத்தையே உருவாக்கிவிட்டது.

குவியும் பாராட்டு: சாமானியர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்திருக்கின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜீவா, சூரி, ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் என பலர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். நடிகை திரிஷாவோ நேற்று தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக வந்ததை பார்த்து உடனடியாக நீலாங்கரை இல்லத்துக்கு நேரில் சென்று தனது பாராட்டை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஸ்மியின் அட்வைஸ்: அதேபோல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் அந்த வாழ்த்தை குறிப்பிட்டு மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தனது எக்ஸ் பக்கத்தில், "முதலில் வாழ்த்து கடிதம்.. அப்புறம் பாராட்டு விழா.. மயங்கிவிடாதீர்கள் சி.எம்.சார்" என்று விஜய்க்கு அட்வைஸ் செய்திருக்கிறார். விஜய்யின் அபிமானியாக பார்க்கப்படும் பிஸ்மி இப்படி ஒரு அட்வைஸ் செய்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X