என்னோடு ஒப்பிட்டு பிரபுதேவாவை அவமானப்படுத்தாதீங்க- தனுஷ் கெஞ்சல்
சென்னை: தனுஷின் துள்ளலும், துடிப்புமான நடனத்திற்கென்றே ஒரு ரசிகப் பட்டாளம் இருக்கிறது.
ஒல்லியா, நரம்பு மாதிரி இருந்துட்டு என்னமா ஆடுறான் இந்த சுள்ளான்' என எல்லாரையும் செல்லமாக திட்ட வைத்த பெருமைக்குரியவர் தனுஷ்.
ஆனால் தன்னடக்கத்தோடு ' நான் மோசமான டான்சர். ஒவ்வொரு ஸ்டெப்பிற்கும் அதிகப்படியான சக்தியை செலவிட்டே நடனம் ஆடுகிறேன்' என சொல்கிறார் இந்த சூப்பர்ஸ்டார் வீட்டு மாப்பிள்ளை.

லுங்கியில் கலக்கல்...
'ஆத்தே...ஆத்தே..' என்று வெறும் லுங்கியை ப்ராபர்டியாக பயன்படுத்தி ஆடி, டான்ஸ் ரசிகர்களுக்கு புது ரூட் போட்டு கொடுத்த தனுஷ், நடனம் சொல்லிக் கொடுத்த டான்ஸ் மாஸ்டருக்கு தேசிய விருது கிடைக்கச் செய்தார்.

இளசுகளின் மன்மத ராசா...
காய்ச்சலோடு ஆடி சிறுசு முதல் பெருசு வரை அனைவரையும் 'மன்மத ராசா' காய்ச்சலுக்கு உட்படுத்திய பெருமைக்குரிய டான்ஸர் தனுஷ்.

காதல் கொண்டேன்...
‘திவ்யா... திவ்யா..' என தனுஷ் குதித்த குதியில் ரசிகப் பெருமக்கள் கொஞ்சம் அதிகமாகவே ஆடித்தான் போனார்கள்.

ஒய் திஸ் கொலைவெறி...
‘ஒய் திஸ் கொலைவெறி...' என்று கேட்டு, பிரதமர் வீட்டில் விருந்து சாப்பிட்ட டான்ஸர் இவர்.

பிரபுதேவா மாதிரி...
தனுஷின் டான்ஸ் ஸ்டைலைப் பார்த்து அவரது ரசிகப் பெருமக்கள் சிலர் பிரபுதேவாவோடு ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளுகிறார்களாம்.

பாவம் பிரபுதேவா...
பிரபுதேவா ஒரு நடனப்புயல், நடன மாமேதை. அவரோடு என்னை ஒப்பிட்டு பிரபுதேவாவை அவமானப் படுத்தாதீர்கள் என்கிறார் தனுஷ்.

ஹார்ட் அட்டாக்...
தமாஷாக, ‘நீங்கள் என்னை பிரபுதேவாவோடு ஒப்பிட்டு பேசுவது தெரிந்தால், நிச்சயம் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும்' எனக் கூறிச் சிரிக்கிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











