ஒன்னும் தெரியாது.. விஜய் அரசியல் குறித்து மம்மூட்டி சொன்ன கருத்தை பாருங்க.. இது லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், கேரளம் சட்டமன்ற பொதுத் தேர்தல் என எல்லாம் முடிந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பொதுத் தேர்தலும் முடிந்துவிட்டால், மே 4ஆம் தேதி ரிசல்ட்க்காக காத்திருக்கலாம். இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள், தமிழ்நாடு தேர்தல், கேரளா தேர்தல் குறித்த கேள்விகளுக்கு நடிகர் மம்மூட்டி அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிட்டது. இப்படி இருக்கையில் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி பலர் மத்தியில் இருக்கிறது. விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார், அதாவது, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே, திமுக எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமே பிரதான அரசியல் செயல்பாடாக கொண்டு அரசியல் செய்து வந்தார். இப்படி இருக்கையில் அவரது கட்சியால் எந்த அளவுக்கு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இப்படி இருக்கையில் படப்பிடிப்புக்காக சென்னை வந்த மலையாள நடிகர் மம்மூட்டியிடம் பத்திரிகையாளர்கள் தமிழ்நாடு தேர்தல், கேரளம் தேர்தல், விஜய்யின் அரசியல் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மம்மூட்டி ஒற்றை வார்த்தையில், " ஒன்னும் தெரியாது" என்று பதில் அளித்து விட்டு சிரித்தபடியே சென்றார். இவரது இந்த ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications