twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தல ரசிகன், ஆனால் அவர் படத்தை முதல் நாள் பார்க்க பிடிக்காது: சொல்கிறார் 'அருவி' நடிகர்

    By Siva
    |

    Recommended Video

    நான் தல ரசிகன். ஆனால் தல படத்தை முதல்நாள் பார்க்க பிடிக்காது - அருவி பாலாஜி- வீடியோ

    சென்னை: அஜீத் படம் ரிலீஸான அன்று முதல் நாள் தியேட்டரில் பார்க்க பிடிக்காது என்று அருவி பாலாஜி தெரிவித்துள்ளார்.

    அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள அருவி படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. அந்த படம் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மக்கள் இன்னும் அருவி பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    நடிகை

    நடிகை

    பெரிய நடிகர், நடிகைகள் கிடையாது, இயக்குனரோ புதுமுகம் அப்படி இருந்தும் அருவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தை கழுவி ஊற்ற சிலர் இருந்தாலும் பாராட்ட பலர் உள்ளனர் என்பது தான் உண்மை.

    அருவி

    அருவி

    அருவி படத்தில் உதவியாளாக நடித்துள்ளவர் பாலாஜி. அவர் அஜீத் குமாரின் தீவிர ரசிகனாம். அஜீத்தை எதற்காக பிடிக்கும் என்ற காரணத்தை சொல்லத் தெரியவில்லை பாலாஜிக்கு.

    மாஸ்

    மாஸ்

    அஜீத்தை பற்றிய எல்லாமே பிடிக்கும். அவரின் படங்களை முதல் நாள் தியேட்டரில் பார்க்க பிடிக்கவே பிடிக்காது என பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

    முதல் நாள்

    முதல் நாள்

    அஜீத் படங்கள் ரிலீஸான முதல் நாள் தியேட்டரில் அவரின் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் போடும் சத்தத்தில் ஒரு வசனமும் சரியாக கேட்காது. வசனங்கள் கேட்காது என்ற காரணத்தால் தான் தல படங்களை முதல் நாள் பார்க்க பிடிக்காதாம் பாலாஜிக்கு.

    English summary
    Balaji who has acted in Aruvi said in an interview that he is a very big fan of Ajith but doesn't like to watch his new movies on the first day of its release. He has explained as to why he is not fond of watching Ajith movies on the first day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X