என் பெயரையோ, போட்டோவையோ போட்டு மோசடி பண்ண வேண்டாம்.. யோகிபாபு பரபரப்பு வீடியோ!
சென்னை: விரைவில் வெளியாகவுள்ள தெளலத் படத்தில் யோகி பாபு தான் லீடு என்கிற பேரில் விளம்பர போஸ்டர் வெளியான நிலையில், அதுகுறித்த விளக்க வீடியோ ஒன்றை யோகி பாபு வெளியிட்டுள்ளார்.
Recommended Video
காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்ந்துள்ளார் யோகி பாபு.
இந்நிலையில், தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக யோகி பாபு குற்றம்சாட்டி உள்ளார்.

எனக்கு சம்பந்தம் இல்லை
இயக்குநர் சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள தெளலத் எனும் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், யோகி பாபுவை லீடாக வைத்து வெளியான போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரை பார்த்த நடிகர் யோகி பாபு, "இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் 'தெளலத்' படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்." என அதிரடியாக ட்வீட் போட்டிருந்தார்.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். pic.twitter.com/PpxpcLscrY
— Yogi Babu (@iYogiBabu) August 14, 2020
என் பெயரில் மோசடி
இந்நிலையில், தற்போது மீண்டும் அது குறித்து விளக்க வீடியோ ஒன்றை நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சில படங்களில் ஒன்று, இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். ஆனால், அந்த படங்களை புரொமோஷன் செய்ய என்னை லீடு செய்து மோசடி செய்து வருகின்றனர் என பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர்கள்.. இயக்குநர்களுக்கு
மேலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வேண்டுகோள் என பதிவிட்டுள்ள யோகி பாபு, தான் பேசிய வீடியோவில் அதே கருத்தை முன் வைத்துள்ளார். தான் அதிக காட்சிகளில் நடிக்காத படங்களில் தன்னை வைத்து விளம்பரம் செய்வதோ, வியாபாரம் செய்வதோ வேண்டாம். இதனால், தனது ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதிக்கும்
"உண்மை, இந்த பிரச்சனை மக்கள்செல்வன் விஜய்சேதுபதிக்கும் உள்ளது. சிறப்பு தோற்றத்தில் வந்தாலே கதாநாயகன் போல விளம்பரப்படுத்தி ஏமாற்றம் அடைய செய்கிறார்கள்... ரசிகர்களுக்கு பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் டிஸ்ட்ரிபியூட்டர்கள், தியேட்டர்களுக்கு பெரிய பண இழப்பு ஏற்ப்படும்" என யோகி பாபுவுக்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











