தப்பா போர்ட்ரே பண்ணாதீங்க கமல்.. ஆயிஷாவின் ஆணவப் பேச்சு.. ஒரேயடியாய் அழ விட்ட கமல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டான கமல்ஹாசனையே கடுப்பாக்கி விட்டார் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா.
ஒரு முறைக்கு பல முறை குறும்படம் போட்டுக் காட்டியும் தன் மீது தவறே இல்லை என்பது போல ஆயிஷா பேசியதும், மலையாளத்தில் ஷெரினாவுடன் ஜோடி போட்டு ரகசியங்கள் பேசி விட்டு ரச்சிதா விஷயத்தில் ஒன்றுமே செய்யாதது போல நடித்த நிலையில், கமல் அந்த பிரச்சனையை கையில் எடுத்தார்.
உடனடியாக உலகிலேயே தன்னை போல அப்பாவி இல்லை என்பது போல நடித்து என்னை அப்படி தப்பா போர்ட்ரே பண்ணாதீங்க கமல் சார் என ஆயிஷா சொன்னதும் கமல் செம டென்ஷனாகி விட்டார்.

தெரியல புரியல
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே உடம்பு முடியல, ஹெல்த் பிராப்ளம் என சீக்கு வந்த கோழி போலவே ஆயிஷா சொல்லி தனது ஸ்ட்ராட்டஜியை யூஸ் பண்ணி ஷெரினா போல விளையாடி வருகிறார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், கமல் எப்படி சொல்லியும் எனக்கு ஒன்றுமே புரியல, தெரியல என சொல்லி அவரையும் கடுப்பாக்கி விட்டார்.

ரச்சிதா மேட்டர்
உடம்பு முடியலைன்னு சொல்லிட்டு கேம் ஆடாமல் வெளியேறாமல் ரச்சிதாவை ஆட்டத்தை விட்டு வெளியேற்ற ஆயிஷா காரணமாக இருந்ததும் அசீம் சொன்னதை கேட்டு அவர் விளையாடிய பஞ்சாயத்தைத் தான் கமல் பேசுகிறார் என்றே புரியாமல் ஆயிஷா பேசி வந்த நிலையில், அவரது மண்டைக்குள் உரைக்குமாறு கமல் பேசியது ஆயிஷாவை அதிர்ச்சியாக்கியது.

போர்ட்ரே பண்ணாதீங்க
சார் நான் வேண்டுமென்றே ரச்சிதாவை அவுட் ஆக்கியது போல போர்ட்ரே பண்ண வேண்டாம் என கமல் முன்னாடியே ஆணவப் பேச்சு பேசியதும் ஆண்டவர் கடுப்பாகி விட்டார். எனக்கு போர்ட்ரேலாம் பண்ணத் தெரியாது என ஒரே போடாக போட்டு ஆயிஷாவை வறுத்தெடுத்து விட்டார்.

ஒரே அழுகை
வேற யாருக்காவது அழணுமா என கமல் மீண்டும் கிண்டலடித்து ஆயிஷாவை ஷோ முடியும் வரை கதற கதற அழ வைத்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆயிஷா ஒரு ஒண்ணா நம்பர் விஷம், எப்படி ஆட்டிட்யூட் காட்டுது பாருங்க என ரசிகர்கள் வச்சு விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











