ஷிவானியை என் ஆளுன்னு சொல்லாத.. சுச்சியிடம் அப்படி கத்திய பாலா..பைத்தியம் ஆயிட்டானா பயில்வான்?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் குரூபிசம் இருக்கு என பாலா பாடியதற்கு எதிராக சுசித்ரா, உனக்கும் தான் ஒரு குரூப் இருக்கு என மூஞ்சிக்கு நேரா கமெண்ட் அடித்தார்.
மேலும், ஷிவானியை பாலாவின் ஆள் என சுச்சி சொன்னதும், பாலாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
ஷிவானியை என் ஆளுன்னு சொல்லாத என சுச்சியிடம் காட்டுத் தனமாக பாலா கத்தியது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

குரூபிசம் சண்டை
பாலாஜி முருகதாஸை குரூப்பா பிளான் பண்ணி உள்ள அனுப்ப சொன்னது பிக் பாஸ். ஆனால், ஏதோ குரூபிசம் பண்ணி தன்னை அனுப்பிட்டாங்க என பாலா எகிறியதும், கண்ணாடி ஜெயிலுக்குள் வந்த பிறகும் அடங்காமல் சுச்சியிடம் சண்டை பிடித்ததையும் பார்த்த ஏகப்பட்ட பாலா ரசிகர்களே அந்த ஆர்மியை விட்டு வெளியேறி இருப்பார்கள்.

கண்ணாடி அருகே காவல்
பாலாஜி முருகதாஸ் ஜெயிலுக்குள் போகிறான் என தெரிந்ததும் ஃபீல் பண்ன ஆரம்பித்த ஷிவானி நாராயணன், வெளியே வந்து கட்டித் தழுவும் வரை விட விலலை. கண்ணாடி அருகே ஹட்ச் டாகாக பாலாவை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததை பார்த்த சுச்சிக்கு சுள்ளுன்னு ஏறிடுச்சு.

இரிடேட்டா இருக்கு
ஷிவானி ஏன் இங்க வரா.. இரிடேட்டா இருக்கு.. என்னை பார்த்து கிண்டல் அடிச்சி கமெண்ட் பண்றா.. உன் ஆள் உன்னை பார்க்கணும்னா வெளியே வந்ததும் பார்க்க சொல்லு, எனக்கு பிடிக்கல என சுசித்ரா பாலாவின் சூட்டைக் கிளப்ப, வெடிக்க ஆரம்பித்து விட்டார் பாலாஜி முருகதாஸ்.

என் ஆளுன்னு சொல்லாத
உடனே கோவத்தின் உச்சிக்கே சென்ற பாலாஜி முருகதாஸ், ஷிவானியை என் ஆளுன்னு சொல்லாத எனக்கு யாரும் இங்க ஆள் கிடையாது என கோபத்தில் வெடித்து சிதறினார். மேலும், ஆஜீத் எல்லாம் நல்லா ஏமாத்துக்காரன். அவன் தான என்னை உள்ளே அனுப்ப காரணம் சொன்னான் என்றும் ஆஜீத் மேலும் தனது கோபத்தை கொட்டினார்.

கப்சிப்பான சுச்சி
பாலா அந்த அளவுக்கு எகிறி கொண்டு பேசுவதை கேட்டுக் கொண்டு, ஒண்ணுமே நடக்காத மாதிரி இருக்கும் சுச்சியை பார்த்துத் தான் பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே இரிடேட் ஆகி உள்ளனர். பயில்வானுக்காக இப்படி அலையுதே இந்த பொம்பளை என சுசித்ராவை பச்சை பச்சையாக திட்டி வருகின்றனர்.

சைலன்ட் கில்லர்
சுசித்ரா ஒண்ணும் லூசு கிடையாது. அவங்க சரியான சைலன்ட் கில்லர். பிளான் பண்ண மாதிரியே பாலாஜி முருகதாஸுக்கும் ஷிவானிக்கும் பிரேக்கப் பண்ண வைத்து, பாலாஜியை வொர்ஸ்ட் பர்ஃபார்மர் ஆக்கி தன் கூடவே ஜெயிலுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க, இன்னும் கூடிய சீக்கிரத்திலேயே பாலாவை பைத்தியமாக்கி வெளியே அனுப்பப் போறாங்க என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











