தமிழ் நடிகர், தென்னிந்திய நடிகர்னு இனி சொல்லவேண்டாம்: இந்திய நடிகர்னு சொல்லுங்க தனுஷ் பளீச்!

சென்னை: தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டி பறந்து வருகிறார் தனுஷ்.

கடந்த வாரம் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'தி கிரே மேன்' நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தனுஷ் கூறியுள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.

தி கிரே மேன்

தி கிரே மேன்

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'தி கிரே மேன்' கடந்த 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. 'கேப்டன் அமெரிக்கா', 'அவெஞ்சர்ஸ்' போன்ற பிரமாண்டமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ரூசோ பிரதர்ஸ், 'தி கிரே மேன்' படத்தை இயக்கியுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்கள் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் கோலிவுட் அசுரன் தனுஷும் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

'தி கிரே மேன்' படம் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களிடமும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கெல்லாம் ஒரே காரணம், தனுஷும் இந்தப் படத்தில் கமிட் ஆகியிருந்தது மட்டுமே. இதனால், 'தி கிரே மேன்' படம் வெளியாகும் முன்னரும் சரி, இப்போதும் சரி தனுஷ் பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

வில்லனாக இருந்தாலும் நல்லவன்

வில்லனாக இருந்தாலும் நல்லவன்

தி கிரே மேன் படத்தில் தனுஷின் கேரக்டர், செம்மையாக செட்டாகி இருக்கிறது. அவிக் சேன் என்ற பாத்திரத்தில் கொடூரமான கேங்ஸ்டர் லீடராக வரும் தனுஷ், கெட்டவனாக இருந்தாலும் குழந்தைகள், பெண்களை கொலை செய்வதில் விருப்பம் இல்லாத நல்லவனாகவே நடித்திருந்தார். அதேபோல், தனுஷின் இன்ட்ரோ சீனும், 'ஹலோ மை செக்ஸி தமிழ் ஃபிரண்ட்' என கிறிஸ் எவன்ஸ் தனுஷை அழைக்கும் காட்சியும் அவரது ரசிகர்களுக்கு டபுள் டமக்காவாக இருந்தன.

போட்டுத் தாக்கு

போட்டுத் தாக்கு

தனுஷுக்கு இரண்டே சீன்ஸ் தான் என்றாலும், அதிலும் அவர் ஆக்சனில் செம்மையாக ஸ்கோர் செய்து மாஸ் காட்டியிருந்தார். ரியான் கோஸ்லிங் தனுஷை 'பொடிப்பையன்' என கலாய்க்க, பதிலுக்கு தனுஷ் அவரை போட்டு பொளந்துகட்டும் ஃபைட் சீக்குவென்ஸ் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. க்ளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியிலும் கிறிஸ் எவான்ஸ் கோட்டைக்குள் ஒத்தையாக என்ட்ரி ஆகும் தனுஷ், அங்கும் கெத்து காட்டியிருப்பார்.

இந்திய நடிகர்

இந்திய நடிகர்

இதனிடையே, 'தி கிரே மேன்' படத்தில் சிறப்பாக நடித்துவிட்டால், அது இன்னும் பல இந்திய நடிகர்களை ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்க வழிவகுக்கும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது ஒரு இண்டர்வியூவில் பேசியிருக்கும் தனுஷ், "என்னை இனி தமிழ் நடிகர், தென்னிந்திய நடிகர் என சொல்ல வேண்டாம், இந்திய நடிகர் என்றே அழைக்கலாம்" எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து வரவேற்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X