திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்.. அண்ணோவ்.. கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்.. கர்ணன் நடிகர் கதறல்!

சென்னை: தன்னை திட்ட வேண்டாம் என கர்ணன் பட நடிகர் நட்ராஜ் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTOR NATTY NATARAJ CHAT | BOLLYWOOD இல் திறமையைத்தான் பாக்குறாங்க | FILMIBEAT TAMIL

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கர்ணன். கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்து வரும் கர்ணன் படம் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.

கர்ணனுக்கு பாராட்டு

கர்ணனுக்கு பாராட்டு

இந்தப் படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பக்கம் விவாதங்கள் சூடு பறந்து வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் கர்ணன் படத்தை பாராட்டி வருகின்றனர்.

நடிகர் நட்டி

நடிகர் நட்டி

மக்கள் மிஸ் பண்ணக்கூடாத படம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கர்ணன் படத்தில் தனுஷை தொடர்ந்து நடிகர் நட்டி என்கிற நட்ராஜூம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

போலீஸாக மிரட்டல்

போலீஸாக மிரட்டல்

கண்ணபிரான் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார் நட்ராஜ். ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக பட்டையை கிளப்பியிருப்பார் நட்டி.

திட்டும் ரசிகர்கள்

திட்டும் ரசிகர்கள்

இந்நிலையில் கர்ணன் படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பை பார்த்த ரசிகர்கள், அவரை போனில் தொடர்பு கொண்டு திட்டி தீர்த்து வருகின்றனர். இதனால் நொந்துப்போன நட்டி, தன்னை திட்டாதீர்கள், அது வெறும் நடிப்புதான் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திட்டாதீங்க எப்போவ்..

திட்டாதீங்க எப்போவ்..

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, என்ன திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்.. அண்ணோவ்... கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்.. போன், மெஸேஜ்ல திட்டாதீங்கப்பா.. முடியிலப்பா.. அது வெறும் நடிப்புப்பா.. ரசிகர்களுக்கு எனது நன்றி.. என பதிவிட்டுள்ளார்.

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை

ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நட்ராஜ், நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X