twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் படத்தை திரையிடாதே..கனடா தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல்

    |

    பொன்னியின் செல்வன் படம் செப்-30 உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடான கனடாவிலும் வெளியாகிறது.

    பொன்னியின் செல்வனை கனடாவில் திரையிடக்கூடாது என பகீரங்கமாக தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    படத்தை வெளியிட்டால் திரைகளை கிழிப்போம், தியேட்டருக்குள் விஷவாயுவை செலுத்துவோம் என மிரட்டலில் கூறப்பட்டுள்ளது.

    Ponniyin Selvan Box Office Prediction: முதல் நாளே உலகளவில் 100 கோடி வசூலை தொடுமா பொன்னியின் செல்வன்?Ponniyin Selvan Box Office Prediction: முதல் நாளே உலகளவில் 100 கோடி வசூலை தொடுமா பொன்னியின் செல்வன்?

     உலகெங்கும் நாளை வெளியாகும் பொன்னியின் செல்வன்

    உலகெங்கும் நாளை வெளியாகும் பொன்னியின் செல்வன்

    தமிழ் சினிமாவின் 70 ஆண்டுகால முயற்சி தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை செப்.30 வெளியாகிறது. இப்படத்தில் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலம் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மணிரத்னத்தின் இயக்கத்தில் லைகா நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் கூட்டுத்தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியாகிறது. சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் படம் செப்.30 அன்று வெளியாகிறது.

     கனடா, லண்டனில் படம் வெளியிட கூடாது என மிரட்டல்

    கனடா, லண்டனில் படம் வெளியிட கூடாது என மிரட்டல்

    இந்நிலையில் கனடாவின் ஹாமில்டன், கிச்சனர் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 படத்தை வெளியிட தயாராகி வரும் நிலையில், தற்போது பலருக்கு திரைப்படத் திரையிடக்கூடாது என மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் வழியாக வந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டில் திரையரங்குகளில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக இம்மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

     கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல், திரைப்படங்களுக்கு மிரட்டல்

    கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல், திரைப்படங்களுக்கு மிரட்டல்

    தமிழ் திரைப்படங்கள் நீண்ட காலமாக கனடாவில் உள்ள உள்ளூர் குழுக்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. கனடாவில் இந்தியர்கள் அதிகமாக தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இரவில் தனியாக நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கும் அளவுக்கு அங்கு இந்தியர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது இந்தியப்படங்களுக்கு எதிரான மிரட்டலாக மாறியுள்ளது. கனடாவில் உள்ள பொன்னியின் செல்வன் வெளிநாட்டு விநியோகஸ்தரான KW டாக்கீஸ் தங்கள் நிறுவன மின்னஞ்சலுக்கு வந்த மிரட்டல் வாசக ஸ்க்ரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

     கனடாவின் பிரபல பட விநியோக நிறுவனத்திற்கு இமெயில் மூலம் வந்த மிரட்டல்

    கனடாவின் பிரபல பட விநியோக நிறுவனத்திற்கு இமெயில் மூலம் வந்த மிரட்டல்

    "ஹாமில்டன், கிச்சனர் மற்றும் லண்டனில் இருந்து எங்களிடம் அப்டேட்கள் உள்ளன. பொன்னியின் செல்வன் தமிழ், சுப் இந்திப்படம் அல்லது கேடபிள்யூ டாக்கீஸில் இருந்து ஏதேனும் திரைப்படத்தை இயக்கினால் தாக்கப்படும் என அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் உள்ளிட்ட கேடபிள்யூ டாக்கீஸ் மூலம் விநியோகம் செய்யப்படும் திரைப்படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் இயக்கினால், திரையை கிழித்து அப்பகுதியில் 'நச்சு வாயுவை செலுத்துவோம்' என்று அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     தியேட்டர் உரிமையாளர்களின் திடீர் கவலை

    தியேட்டர் உரிமையாளர்களின் திடீர் கவலை

    கேடபிள்யூ டாக்கீஸ் மூலம் வெளியிடப்படும் எந்த ஒரு திரைப்படத்தையும் குறிவைத்து உள்ளோம் என்று மிரட்டியுள்ளனர். இத்தகைய மிரட்டல் காரணமாக நாளை திட்டமிட்டப்படி கனடா மற்றும் லண்டனில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு ஒருபுறம், தியேட்டர்கள் தாக்கப்படுவது ஒருபுறம் என திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டல் மெயில்கள் பெரிதும் கவலையடையச்செய்துள்ளன.

    English summary
    Ponniyin Selvan Movie is releasing worldwide on Sep-30. It is also released in Canada, a country with a large population of Indians. Theatre owners have been openly threatened not to screen Ponni'yin Selvan Movie in Canada and London. The threat says that if the film is released, the screens will be torn down and the theatre will be poisoned
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X