பப்ளிக்காக ஓவியாவிடம் தொழில் ரகசியத்தை சொன்ன சிம்பு
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சியின்போது மார்க்கெட்டை ஏற்ற என்ன செய்ய வேண்டும் என்ற தொழில் ரகசியத்தை ஓவியாவிடம் தெரிவித்தார் சிம்பு.
சிம்பு இசையில் ஓவியா மரண மட்ட பாடலை பாடினார். இதையடுத்து அவர்களுக்கு திருமணமாகிவிட்டதாக கிசுகிசு கிளம்பியது. இந்நிலையில் ஓவியா விஜய் டிவியின் அழகிய ஓவியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் போன் மூலம் பேசிய சிம்பு கூறியதாவது,

மார்க்கெட்
ஓவியா தன்னை புகழ்ந்து பேசியதை கேட்ட சிம்பு, இப்படி எல்லாம் சொல்லாதம்மா எனக்கு மார்க்கெட் குறைந்துவிடும். தப்பா சொன்னால் தான்மா எனக்கு மார்க்கெட் ஏறும் என்றார்.

11 முறை
எனக்கு ஒரு பத்து வாட்டி கல்யாணம் நடந்திருக்கு இதுக்கு முன்னாடி. இப்போ ஓவியாவுடன் திருமணமாகியுள்ளது. ஊரே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குது நாங்க எப்படா உனக்கு கல்யாணம் பண்ணுவது என்று என் அம்மா கேட்டார்கள். சரி விடும்மா அவங்கவங்க அப்பப்ப கல்யாணம் பண்ணி வைப்பதே ஜாலியாத் தான் இருக்கு என்றேன்.

கஷ்டப்படவா?
உங்களுக்கு சீக்கிரமே ஒரு நல்ல பெண்ணாக கிடைக்கட்டும் என்று ஓவியா கூறினார். இதை கேட்ட சிம்புவோ, எதுக்கு நான் கஷ்டப்படுவதற்கா என்று கேட்டார்.

குழந்தை
பாட்டு பாடியதற்கே கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். நானும் ஓவியாவும் சேர்ந்து நடித்தால் குழந்தையே பிறந்தது என்று சொல்லிவிடுவார்கள். நாங்கள் சேர்ந்து நடிப்பது பற்றி பார்க்கலாம் என்றார் சிம்பு.


Click it and Unblock the Notifications











