'ஒரு நியாய தர்மம் வேண்டாம், சிம்பு பற்றி தப்புத் தப்பா பேசறாங்க...' மாநாடு தயாரிப்பாளர் வருத்தம்!

By

சென்னை: நடிகர் சிம்பு பற்றி தவறாகப் பேசி வருவது வருத்தம் அளிப்பதாக மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

STR Latest Emotional Video | Maanadu | Simbhu | Simbhu Fans

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாடு படத்தில் நடித்து வருகிறார், சிம்பு. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இவர், 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' படங்களைத் தயாரித்தவர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னையில் ஷூட்டிங்

சென்னையில் ஷூட்டிங்

இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ தொடங்க வேண்டி இருந்தது. சிம்புவால் ஷூட்டிங் தள்ளிப் போனது. பிறகு படத்தை கைவிடுவதாகத் தயாரிப்பாளர் அறிவித்தார். பிறகு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன், மாநாடு படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.

அப்துல் காலிக்

அப்துல் காலிக்

சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாரதிராஜா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், டேனியல் உட்பட பலர் நடிக்கின்றனர். அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார், சிம்பு. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. பின்னர் லொகேஷன் மாறியது.

பொய்யாக்கும் விதமாக

பொய்யாக்கும் விதமாக

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தீம் பார்க் ஒன்றில், செட் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. அங்கு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிம்புவுடன், கல்யாணி, அஞ்சனா கீர்த்தி, பிரேம்ஜி, கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். அவர்களுடன் இருநூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், தன் மீதான புகாரைப் பொய்யாக்கும் விதமாக, படப்பிடிப்புக்கு சிம்பு ஒழுங்காக வருகிறார் எனப் படக்குழு தெரிவித்திருந்தது.

தவறான தகவல்

தவறான தகவல்

இதற்கிடையே, சிம்பு பற்றித் தவறாகப் பலர் செய்தி பரப்புவதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 'இந்தப் படத்துக்காக, கடுமையானப் பயிற்சி செய்து, உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார் சிம்பு. சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து சரியான நேரத்துக்குச் செல்கிறார். இருந்தும் அவர் பற்றி தவறானச் செய்திகள் வருவது வருத்தமாக இருக்கிறது.

பரப்புகிறார்கள்

பரப்புகிறார்கள்

அவர் எப்படி வருகிறார், போகிறார் என்பதைப் படப்பிடிப்பில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். யாரிடமும் விசாரிக்காமல் பொய்யாக வதந்தி பரப்புவதும் எழுவதும் சரியானதாக இருக்காது' என்று அவர் தெரிவித்துள்ளார். மாநாடு படத்தின் அடுத்த ஷெட்யூல் ஐதராபாத்தில் திங்கட்கிழமை முதல் தொடங்க இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X