இதுவே ஒருதலை பட்சம் தான்.. என்னை குழந்தைன்னு சொல்லாதீங்க.. அர்ச்சனாவை அசிங்கப்படுத்திய பாலாஜி!

சென்னை: பட்டிமன்றம் போட்டியில் நடுவராக இருந்த அர்ச்சனா அக்காவை மீண்டும் ஒரு தலை பட்சமாக பேசாதீங்கன்னு அசிங்கப்படுத்தினார் பாலாஜி முருகதாஸ்.

பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த வீடா? போர்க்களமா? என்கிற டாப்பிக்கில் நேற்று பட்டிமன்றம் போட்டி நடைபெற்றது.

7 பேர் ஒரு அணியாகவும், 8 பேர் இன்னொரு அணியாகவும் பிரிந்து போட்டிப் போட்டு பேசினர்.

தீர்ப்பு சொன்ன அர்ச்சனா

தீர்ப்பு சொன்ன அர்ச்சனா

நேற்றைய எபிசோடில் நாட்டாமை வேலையை பார்த்த அர்ச்சனா அக்கா, கடைசியா தீர்ப்பு சொல்லும் போது, பிக் பாஸ் குடும்பம் பாசத்தால் பிணைந்த ஒரு ஆனந்த வீடு என தீர்ப்பு சொன்னார். அதை மட்டும் சொல்லிட்டு சும்மா இருந்திருந்தா பரவாயில்லை. தேவையில்லாமல், பாலாஜியை சீண்டி விட்டு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டார்.

தீர்ப்பு சரியில்லையே

தீர்ப்பு சரியில்லையே

நாடா? காடா? டாஸ்க்கில், வயசான முதியவரை வாடா போடான்னு சொல்றதும், இளம் வயது பெண்களை மட்டும் விளக்கமாத்தால் அடித்து விளையாடுவதும், நல்ல பொம்பளையே இல்லை என ஏசுவதும் தான் ஆனந்த குடும்பமா? எல்லாரும் போட்டி போடத்தான் வந்திருக்கீங்க, இது ஒரு போட்டி களம் தான் என ரசிகர்கள் தீர்ப்பு சொல்லி வருகின்றனர்.

பொளீர்னு ஒண்ணு வைக்கணும்

பொளீர்னு ஒண்ணு வைக்கணும்

பிக் பாஸ் வீடு ஒரு அன்பான குடும்பம் என தீர்ப்பு சொன்ன அர்ச்சனா அக்கா, எல்லா வீட்டுலேயும் குறும்புத்தனம் பண்ணும் குழந்தை ஒண்ணு இருக்கும். அது தான் பாலாஜி. அழும், சிரிக்கும், அடம் பிடிக்கும் பொளீர்னு ஒண்ணு வைச்சா அடங்கிடும் என பாலாஜியை சீண்டி அர்ச்சனா பேசியவுடன் டெம்பர் ஆன பாலாஜி எகிற ஆரம்பித்துவிட்டார்.

நடுவர் வேலையை மட்டும் பாருங்க

நடுவர் வேலையை மட்டும் பாருங்க

இப்ப கூட நீங்க ஒரு தலையாத்தான் பேசுறீங்க, நடுவர் வேலையை மட்டும் பாருங்க என அர்ச்சனாவை சபையிலேயே வச்சு அசிங்கப்படுத்தி விட்டார் பாலாஜி முருகதாஸ். உடனே கோபப்பட்ட அர்ச்சனா, என்னோட வேலையை என்னை பார்க்க விடு என முறைத்தார். நானும் அதைத் தான் சொல்றேன், ஒழுங்கா நடுவர் வேலையை மட்டும் பாருங்க என பாலாஜி பேசியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைன்னு சொல்லாதீங்க

குழந்தைன்னு சொல்லாதீங்க

இதுவே ஒரு தலை பட்சம் தான்.. நீங்க என்னை குழந்தைன்னு சொல்லாதீங்க என பாலாஜி சீறியது எல்லாம் வேற லெவல் ஹைலைட். தெரியாமத்தான் கேக்குறோம் பாலாஜியை எந்த ஆங்கிளில் பார்த்தா உங்களுக்கு குழந்தை மாதிரி தெரியுது அர்ச்சனா அக்கா என நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

தலைவலி அர்ச்சனா

தலைவலி அர்ச்சனா

பிக் பாஸ் வீட்டில் 17வது போட்டியாளராக வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே அர்ச்சனா நுழைந்த போதே, அவரை பார்த்து பாலாஜி தலைவலி என சொன்னதை, இப்போ ஞாபகம் வைத்து, டைனிங் டேபிளில் அந்த பஞ்சாயத்தை பேசித் தீர்க்க அர்ச்சனா முயன்றார். ஆஜீத்தை குழந்தைன்னு சொன்னாலே அவனுக்கு அது பிடிக்காது, பாலாஜியை போய் இப்படி சொல்றீங்களே என பிக் பாஸ் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X