இளைஞர்களின் மனதில் விஷத்தை விதைக்காதீர்கள்.. கவுதம் மேனனுக்கு கோரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்!

சென்னை: இளைஞர்களின் மனதில் விஷத்தை விதைக்காதீர்கள் என இயக்குநர் கவுதம் மேனனுக்கு பிரபல இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

Karthik dial seitha en review | Gautham Menon | AR Rahman | STR |Trisha

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் கார்த்திக் டயல் செய்த எண். இந்தப் படத்தில் திரிஷா மற்றும் சிம்பு ஆகியோர் நடித்திருந்தனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ள நிலையில் அந்தக் கதையை மையப்படுத்தியே இந்தப் படமும் உருவாக்கப்பட்டிருந்தது.

ஐ லவ் யூ..

ஐ லவ் யூ..

லாக்டவுன் என்பதால் வீடியோ கால் மூலம் கவுதம் மேனன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதில் ஏற்கனவே திருமணமான நடிகை திரிஷாவுக்கு அவரின் முன்னாள் காதலரான சிம்பு போன் செய்து ஐ லவ் யூ, ஐ நீட் யூ என கூறுகிறார். அதனைக் கேட்கும் திரிஷா அவர் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவரை உற்சாக படுத்தும் வகையில் பேசுகிறார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இப்படியாக உள்ளது அந்த குறும்படம். இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கள்ளக்காதலா என கேட்டு கடுமையாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களிலும் படத்தை கழுவி ஊற்றினர். படத்தை மரண கலாய் கலாய்த்து மீம்ஸ்கள் பறந்தன. அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் படத்தை ஆகா ஓகோவென புகழ்ந்து தள்ளினர்.

இயக்குநர் மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி

இந்நிலையில் இயக்குர் மோகன் ஜி, கவுதம் மேனனுக்கு டிவிட்டரில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, சார்... பல இளைஞர்கள் உங்களின் படம், ஸ்டைல், டயலாக் டெலிவரி, படத்தை உருவாக்கும் பேட்டர்ன், மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள் என பல விஷயங்கள் உங்களைதான் பின்பற்றுகிறார்கள்.

எதிர்ப்பும் ஆதரவும்

எதிர்ப்பும் ஆதரவும்

அவர்களின் மனதில் விஷத்தை பாய்ச்சாதீர்கள்.. ஜெஸி ராய், என் மனச்சோர்வை போக்க எந்த விலையானாலும் நீங்கள் தேவை.. ஒரு ரசிகனாக இது என்னுடைய கோரிக்கை சார் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X