twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போடாதீங்க, பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க: 100 பிரபல இயக்குநர்கள் கோரிக்கை

    By Siva
    |

    சென்னை: ஜனநாயகத்தை காப்பாற்ற லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வெற்றிமாறன் உள்பட 100 பிரபல இயக்குநர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தியா முழுவதும் உள்ள 100 திரைப்பட இயக்குநர்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் ஜனநாயகத்தை காக்க பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பான அறிக்கை www.artistuniteindia.com என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் வெற்றி மாறன், ஆனந்த் பட்வர்தன், குர்விந்தர் சிங், கபிர் சிங் சவுத்ரி உள்ளிட்ட 100 பிரபல இயக்குநர்கள் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

    வெறுப்பு அரசியல் நடத்துவது, தலித்துகள், இஸ்லாமியர்கள், விவசாயிகளை ஒதுக்குவது, கலாச்சார மற்றும் அறிவியல் மையங்களை அழிப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அந்த இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

    பாசிசம்

    பாசிசம்

    நம் நாட்டுக்கு சோதனையான நேரம் இது. நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள். இந்த நாட்டின் குடிமகனாக இருப்பது சிறப்பான உணர்வு. ஆனால் அது தற்போது ஆபத்தில் உள்ளது. லோக்சபா தேர்தலில் நாம் யோசித்து வாக்களிக்கவில்லை என்றால் பாசிசம் நம்மை மிரட்ட காத்திருக்கிறது.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைத்தும் மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இன்டர்நெட், சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்பை தூண்டிவிடும்படி பிரச்சாரம் செய்கிறார்கள். தேசபக்தியை வைத்துதான் அவர்களின் வாக்கு வங்கியை வலுப்படுத்துகிறார்கள். யாராவது லேசாக அதிருப்தி தெரிவித்தாலும் தேசதுரோகி என்கிறார்கள். அதிருப்தி தெரிவித்ததால் பிரபல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் உயிர் போயுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

    தொழில் அதிபர்கள்

    தொழில் அதிபர்கள்

    அரசியல் லாபத்திற்காக பாதுகாப்பு படையினரின் உயிரை பணயம் வைக்கிறார்கள். படங்கள், புத்தகங்களை தடை செய்தும், சென்சார் செய்தும் மக்களிடம் உண்மை சென்றடையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். விவசாயிகளை மொத்தமாக மறந்துவிட்டார்கள். இந்தியாவை சில தொழில் அதிபர்களின் போர்டு ரூமாக்கிவிட்டது பாஜக. மோசமான பொருளாதார கொள்கைகளால் பாதிப்பு ஏற்பட்டும் கூட அவை வெற்றி பெற்றது போன்று காட்டியுள்ளனர். இதெல்லாம் பொய் பிரச்சாரத்தால் சாத்தியமாகியுள்ளது.

    அரசு

    அரசு

    அவர்களை மீண்டும் ஆட்சிக்கு வர விடுவது மிகப் பெரிய தவறு. அதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசை தேர்வு செய்வோம். இது தான் உங்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என்று அந்த இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    100 film makers from all over India have requested people not to vote for BJP in the upcoming Lok Sabha elections.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X