விருப்பம் மட்டும் போதாது... வேலையை தொடங்குங்க... அருண் விஜய் மெசேஜ்
சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
சினம் உள்ளிட்ட அவரது படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக செயல்பட்டு வரும் அருண் விஜய், இன்றைய தினம் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு மெசேஜை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிறப்பான படங்கள்
நடிகர் அருண் விஜய் தொடர்ந்து சிறப்பான படங்களை தந்து வருகிறார். நடிகர் விஜய்குமாரின் மகன் என்ற அந்தஸ்து இருந்தாலும் திரைத்துறையில் தன்னை போராடி நிரூபித்தவர். இவரது தேர்ந்தெடுத்த நடிப்பில் பல படங்கள் ரசிகர்களின் ஆச்சர்ய அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன.

தொடர் பயிற்சிகள்
கொரோனா காரணமாக தற்போது வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் அருண் விஜய் பொழுதை போக்கி வருகிறார். ஆயினும் தன்னுடைய கட்டுக்கோப்பான உடலுக்கு தேவையான பிட்னஸ் பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார். இவரது கட்டுக்கோப்பான உடலும் இவரது சிறப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.
Recommended Video

ரிலீசுக்குத் தயார்
தற்போது இவரது நடிப்பில் சினம் மற்றும் பார்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அருண் விஜய் அறிவித்துள்ளார். கொரோனா அலை தமிழகத்தில் ஓரளவற்கு குறைந்துள்ள நிலையில் கூடிய விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு மெசேஜ்
சமூக வலைதளங்களிலும் அருண் விஜய் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களிடம் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் விருப்பம் மட்டும் படாதீர்கள், அதற்கான வேலையை செய்யத் துவங்குங்கள் என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு மெசேஜ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











