»   »  என் தலைவனை பார்த்து தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?

என் தலைவனை பார்த்து தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கலாய்த்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுகிறார்கள்.

அரசியலே வேண்டாம் என்று இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளார். இதை அவர் சொல்லாவிட்டாலும் அவரின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் ரஜினியை கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள், போஸ்ட்டுகள் போடுகிறார்கள். அப்படி போடப்பட்ட ஒரு போஸ்ட் இதோ,


ரஜினி

ரஜினி

'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே


ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்...


1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார்.


2)சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு!
தமிழக மக்கள்

தமிழக மக்கள்

3)அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு!


4)படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு!


5)பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு!


6)லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு!


தலைவன்

தலைவன்

இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க...?


தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா?


இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?
அடுத்த படம்

அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா?
போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிறோம் ,அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?😛😛😛
English summary
Don't you dare criticise Rajinikanth! Social media is full of posts and memes criticising super star Rajinikanth's entry into politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil