இளம் நடிகையுடன் படுக்கையறையில் டிரம்ப் ஆலோசகர் செய்த லீலை.. படம் பிடித்து வெளியிட்ட நடிகர் போரன்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இளம் நடிகையுடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ரூடி ஜியுலியானி செய்த லீலைகள் அம்பலமாகி வைரலாகி வருகிறது.
பத்திரிகையாளராக நடித்த அந்த இளம் நடிகை, ரூடியுடனான பேட்டிக்குப் பின்னர், அவரை படுக்கைக்கு அழைக்கிறார்.
படுக்கையில் இருந்து கழண்ட பேன்ட்டை மேலே எடுத்து போட்டு டக்கின் பண்ணும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை காமெடி நடிகர் சாச்சா போரன் கோஹன் எடுத்து வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

வசமா சிக்கிய டிரம்ப் ஆலோசகர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமை ஆலோசகரான ரூடி ஜியுலியானி (Rudy Guiliani), ஹோட்டல் அறையில் இளம் நடிகை ஒருவருடன் படுக்கையில் படுத்திருப்பது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. 76 வயதாகும் டிரம்ப் ஆலோசகர் வசமாக சிக்கி உள்ளார் என ட்ரோல்கள் பறக்கின்றன.

செம ஸ்கெட்ச்
அரசியல் தலைவர்களையும் அரசியல் விவகாரங்களையும் கொஞ்சமும் தயக்கம் இன்றி தனது படங்களில் விமர்சிக்கக் கூடிய காமெடி நடிகரும் தயாரிப்பாளருமான சாச்சா போரன் கோஹன் போட்ட செம ஸ்கெட்ச் தான் இது என்பது தெரிந்ததும், அமெரிக்காவே ஆடிப் போயுள்ளது. போரனின் புதிய படமான Borat இரண்டாம் பாகத்திற்காகத் தான் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.

பேட்டி செட்டப்
மரியா பகலோவா எனும் இளம் நடிகை, பேட்டி எடுக்கும் பெண்ணாக நடித்து, அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமை ஆலோசகரான ரூடியிடம் பேட்டி எடுக்கிறார். அதன் பின்னர், அதே ஹோட்டல் அறையில், படுக்கை அறையில் படுத்தபடி ரூடி இருப்பதும், தனது சட்டையை டக்கின் பண்ணும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளன.

15 வயசு பொண்ணு
படுக்கையறையில் படுத்தபடி உடலுறவுக்கு ரூடி தயாராகும் போது, காமெடி நடிகர் போரனின் குரல் கிராஸ் டாக்காக அங்கு ஒலித்து, அந்த பொண்ணுக்கு 15 வயசு தான், இத்தனை சிறிய பெண்ணுடன் உடலுறவு கொள்ளப் போகிறீர்களா என கலாய்த்ததும், துடித்துப் பிடித்து எழுந்து, ஷர்ட்டை டக்கின் பண்ண ரூடி, போலீசாரை அழைத்து அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார்.

படத்துக்காக
Borat, The Dictator, Who is America?. Bruno உள்ளிட்ட அரசியல் நய்யாண்டி படங்களை தயாரித்து நடித்த சாச்சா போரன் கோஹென் இயக்கத்தில் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ள Borat Subsequent படத்திற்காக இந்த காட்சி எடுக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒண்ணுமே பண்ணல
அமெரிக்க அதிபர் டிரம்பின் கொரோனா திட்டம் குறித்த பேட்டி என்றே சென்றேன். அதன் பிறகு தான் இது படத்திற்காக போட்ட செட்டப் என்பதை அறிந்தேன். அந்த ஹோட்டல் அறையில் இருந்த இளம் பெண்ணை நான் ஒண்ணுமே பண்ணல, நான் என்னுடைய ஷர்ட்டில் இருந்த மைக்கை கழட்டிய பின்னர், ஷர்ட்டை டக்கின் பண்ணிய காட்சிகளை வைத்து போரன் கீழ்த்தரமாக விளையாடுகிறார் என ரூடி விளக்கம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











