பிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா?: ரித்விகா விளக்கம்

By Siva

Recommended Video

பிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா?: ரித்விகா விளக்கம்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 டைட்டிலை வென்றதால் கிடைத்த பணத்தை ரித்விகா தானம் செய்துவிட்டார் என்று வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுவரை தோல்வியை மட்டுமே கண்டதாக கூறிய ரித்விகா பிக் பாஸ் 2 டைட்டிலை வென்றார். அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரித்விகா நல்ல காரியத்திற்காக அந்த தொகையை தானம் செய்துவிட்டதாக கூறப்பட்டது.

இது குறித்து ரித்விகா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

தானம்

என் புதுப் பட வாய்ப்புகள் மற்றும் நான் பல்வேறு அமைப்புகளுக்கு தானம் செய்வது குறித்து பல வதந்திகள் பரவியுள்ளது. பட வாய்ப்புகள் மற்றும் பிற குறித்த விபரங்களை ட்விட்டரில் விரைவில் தெரிவிப்பேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று ரித்விகா ட்வீட்டியுள்ளார்.

காமெடி

பிக் பாஸ் 2 வீட்டில் மிக்சர் சாப்பிட்டதற்காக டைட்டிலா என்று அவரை பலர் கிண்டல் செய்தனர். இந்நிலையில் டைட்டிலை வென்ற பிறகும் அவரை தொடர்ந்து கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரித்விகா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பரிசுத் தொகையை வைத்து என்ன செய்யலாம் என்று முடிவு செய்வது ரித்விகாவின் விருப்பம். தானம் கொடுக்குமாறு அவரை கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. அவருக்கு எது விருப்பமோ அதை அவர் செய்யட்டும்.

ஆங்கிலம்

தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் தான் ட்வீட் செய்கிறார்கள். இந்நிலையில் ஆங்கிலத்தில் ட்வீட்டிய ரித்விகாவிடம் தமிழில் கீச்சுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X