அரசியல்வாதிகளின் போஸ்டரை தின்றால் புட் பாய்சன் ஆகிடும்னு கழுதைகளுக்கு பயமோ.. 'பார்த்திfun'!
Recommended Video

புட் பாய்சன் ஆகிடும்னு கழுதைகளுக்கு பயமோ..வீடியோ
சென்னை: விலை உயர்ந்த தாவரங்களை உண்டதற்காக கைது செய்யப்பட்ட கழுதைகள் பற்றி நச்சென்று ட்வீட் போட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.
உத்தர பிரதேச மாநிலம் உராய் மாவட்ட சிறை வளாகத்திற்குள் புகுந்த கழுதைகள் அங்கிருந்த விலை உயர்ந்த தாவரங்களை தின்றுவிட்டன. இந்த குற்றத்திற்காக அந்த கழுதைகளை போலீசார் கைது செய்து 4 நாட்கள் கழித்து விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கழுதைகள் கைது!
தாவரங்களை தின்ற குற்றத்திற்காக-கட்சி தாவுரவங்களை... தாவி இச்சமூகத்தையே கடித்துத் தின்று ஏப்பம் விடும் அரசியல்வாதிகளின் சுவரொட்டிகளை உண்டால்? Food poison ஆகிவிடும் என்ற பயம் உண்டாகியிருக்குமோ அவைகளுக்கு..? என தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications