ஹய்யோ.. "அதை"ப் பத்தி கேக்காதீங்க ப்ளீஸ்.. பிரஸ்மீட்டில் கடுப்பான வரலட்சுமி!
சென்னை : தன்னை அழுத்தமான நடிகை என தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்டவர் வரலட்சுமி சரத்குமார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் தனது நடிப்பால் பலரின் பாராட்டை பெற்றவர்.
Recommended Video
சமீபத்தில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான கிராக், நாந்தி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கின்றன. இதனால் தெலுங்கிலும் வரலட்சுமியின் மார்க்கெட் எகிறி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வரலட்சுமியும், அவரது அம்மா சாயாவும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது நடந்த பிரஸ்மீட்டில் நிருபர் ஒருவர், எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள், ஏன் திருமணத்தை தள்ளி போடுகிறீர்கள் என கேட்டார்.
இதனால் டென்ஷனான வரலட்சுமி, ஒரு பெண்ணிடம் இது போன்ற கேள்வி கேட்பது மிகவும் கேவலமானது என்றார். இது போன்ற கேள்விகளை யாரும் தயவு செய்து கேட்காதீர்கள் என மற்றவர்களையும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், லட்சியம் என்பது ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும். திருமணம் செய்து கொள்வது ஒன்றும் கவுரவம் இல்லை என்றார்.
தெலுங்கில் பிஸியாக இருந்தாலும் தமிழிலிலும் பாம்பன், சேசிங், பிறந்தால் பராசக்தி, கலர்ஸ், யானை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











