விஸ்வரூபம் ரிலீஸ் எப்போன்னு மட்டும் கேட்டுடாதீங்க! - கமல்

இன்று கமல் பிறந்த நாள். இன்றுதான் கோவை, சென்னை, மதுரை என மூன்று மாநகரங்களில் விஸ்வரூபம் இசையை வெளியிட திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தினால் அதை தள்ளி வைத்து விட்டதாக அறிவித்தார் (இன்னிக்கு வெயில் பொளந்து கட்டுது!)
அதற்குப் பதிலாக இன்று காலை 10: 30 மணியளவில் சென்னை சத்யம் தியேட்டரில் "ஆரோ 3டி" டெக்னாலஜியில் தயாரான "விஸ்வரூபம்" படத்தின் ட்ரெய்லரை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக போட்டுக் காண்பித்தார்.
அதுமட்டுமில்லாமல் இன்று நடைபெறுவதாக இருந்த ஆடியோ பங்ஷனும் கேன்சலாகி விட்டதால் அதனால் தன் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக 30 ஊர்களில் உள்ள 30,000 ரசிகர்கள் "விஸ்வரூபம்" படத்தின் ட்ரெய்லர் மற்றும் கமல் அவர்களுடன் நேரடியாக தோன்றி பேசும் நிகழ்ச்சியை நடத்தினார்.
விழாவில் 5.1 மற்றும் ஆரோ 3டி சவுண்ட் டெக்னாலஜியில் ரெடி செய்யப்பட்டிருந்த 'விஸ்வரூபம்' படத்தின் ட்ரெய்லர்கள் போட்டு காண்பிக்கப்பட்டன.
விழாவில் பேசிய கமல், "இந்தியாவிலேயே முதல் முறையாக இந்தப் படத்தில்தான் "ஆரோ 3டி" என்ற புதிய சவுண்ட் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.
அப்போது கமலிடம் 5.1 ட்ரெய்லர் காண்பிக்கப்பட்ட போது பி.வி.பி நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது, ஆனால் ஆரோ 3டி டெக்னாலஜியில் போடப்பட்ட ட்ரெய்லரில் அந்த நிறுவனத்தின் பெயர் இல்லையே..? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கமல், அது வியாபார சம்பந்தமான விஷயம். மற்றபடி நானும், அவர்களும் நட்பாகத்தான் இருக்கிறோம் என்றார்.
"விஸ்வரூபம்" படம் எப்போ ரிலீஸாகும் என்ற கேள்விக்கு, "இந்தக் கேள்வி உங்களிடமிருந்து வரும் என்று நான் எதிர்பார்த்தேன். இப்போதைக்கு அந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள். வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன," என்றார்.


Click it and Unblock the Notifications











