போன்ல லவ் பண்றவங்கள மட்டும் நம்பவே கூடாது... காதலர்களுக்கு கௌதம் மேனன் கொடுத்த டிப்ஸ்!
சென்னை: இயக்குனர் கௌதம் மேனன் காதல் படங்களை இயக்குவதில் மிகவும் ஸ்பெஷலிஸ்ட்
ஸ்டைலான காதல் படங்களுக்கு மட்டுமல்லாமல் ஆக்க்ஷன் படங்களையும் இயக்கி பல வெற்றிகளை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் போன்ல லவ் பண்றவங்கள நம்பவே கூடாது என காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்

மின்னலே மூலம் அறிமுகம்
ஸ்டைலிஷான காதல் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கௌதம் மேனனுக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைகிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால்,அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
காதல் படங்களுக்கு மட்டுமல்லாமல் ஆக்சன் படங்களை இயக்குவதிலும் நான் ஸ்பெஷலிஸ்ட் என காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் என பல ஆக்சன் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா,கார்த்திக் டயல் செய்த எண் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சிம்பு - கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதால் சிம்பு 50 கிலோ வரை உடல் எடையை குறைத்து இப்படத்தில் நடித்துள்ளார்.

தோல்வியை சரி கட்ட
கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கடைசியாக வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா மிகப்பெரிய தோல்விப் படமாக ஆனது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன் அந்தத் தோல்வியை சரி கட்ட மிகவும் கவனமாக இருந்து வருகிறார். இதுவரை ஸ்டைலிஷான இயக்குனராக மட்டும் இருந்து வந்த இவர் இப்பொழுது நடிகராகவும் சினிமாவில் கலக்கிக் கொண்டுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், செல்ஃபி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இப்பொழுது நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கிய கொண்டுள்ளார்.

போன்ல லவ் பண்றவங்கள நம்பக்கூடாது
மனதுக்கு இதமான காதல் படங்களை எடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் போன்ல லவ் பண்றவங்கள மட்டும் நம்பக்கூடாது. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும் அப்போதுதான் அந்த பீல் உங்களுக்கு கிடைக்கும். போனில் சாரி சொல்வதை விடவும் நேரில் போய் உங்கள் காதலரிடன் கண்களைப் பார்த்து சொல்லிப் பாருங்கள் அந்த ஃபீலே தனி என லவ்வர்ஸ்-க்கு டிப்ஸ் வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











