சுதா கொங்கராவை அப்படி சொல்லாதீர்கள்.. அது மிகப் பெரிய பாவம்!
சென்னை : விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் தமிழில் வெளியான துரோகி படத்தை இயக்கி தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா
அதைத்தொடர்ந்து இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது
சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ள சுதா கொங்கராவை அப்படி சொல்லாதீர்கள் என இயக்குனர் பாலா பேசியுள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

முதல் படம் கைகொடுக்கவில்லை
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுதா கொங்கரா இப்போது தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் இரண்டாவது படமாக இறுதிச்சுற்று இந்திய அளவில் மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது

முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சராக
தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் நடிகர் மாதவன் நடித்து இருந்தார்.அதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் மாதவன் இறுதிச்சுற்று படத்தில் முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சராக நடித்து வேறுவிதமான பரிமாணத்தை கொடுத்து ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்திருப்பார். தமிழில் இறுதி சுற்று என்ற பெயரிலும் இந்தியில் சாலா குடோஸ் என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது பின் இந்தப் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது

சூரரைப்போற்று இந்தியில் ரீமேக்
இறுதிச்சுற்று கொடுத்த வெற்றியை தொடர்ந்து சூர்யாவுடன் கூட்டணி அமைத்து சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆஸ்கார் விருதுக்கும் முயற்சித்த சூரரைப் போற்று திரைப்படம் தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த படைப்பாக உள்ளது. சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் மிக முக்கிய இயக்குனராக மாறிய சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்தை இந்தியில் இப்போது இயக்கி வருகிறார்.

சுதா கொங்கராவை அப்படி சொல்லாதீர்கள்
இந்த நிலையில் இயக்குனர் பாலா இறுதிச்சுற்று படத்தை பார்த்துவிட்டு சுதாவின் ஹார்ட் ஒர்க்கை பார்த்து மிகவும் பிரமித்து போனதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் . அப்பொழுது தமிழ் சினிமாவில் ஆண் இயக்குனர்களை பெரும்பாலும் இயக்குனர்கள் என்றே அழைக்கிறார்கள் ஆனால் ஒரு பெண் இயக்குனர்களை பெண் இயக்குனர் என அடையாளப்படுத்தி அழைக்கிறார்கள் எனக் கேட்டதற்கு.. அந்த வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது.. அது மிகப் பெரிய பாவம்.. இயக்குனர்களில் என்ன ஆண், பெண்.. இயக்குனர்களில் அனைவரும் சமம் தான். என அந்த நேர்காணலில் பாலா தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











