twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நோக்கம் ஒன்னுதான்..ஆனாலும் பிரதமர் சொன்னதையும் இதையும் கம்பேர் பண்ணாதீங்க.. சொல்றார் மோகன்ராஜா

    By
    |

    சென்னை: பிரதமர் மோடி சொன்ன விஷயத்தையும் வேலைக்காரன் பட காட்சியையும் ஒப்பிட வேண்டாம் என்று இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    கொரோனா !! டைரக்டர் பாக்யராஜ் உருக்கம் | ONEINDIA TAMIL

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ் இப்போது மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

    இந்தியாவிலும் இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது.

    'இதுக்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன்?' நடிகை ஸ்ரேயா சொல்ற காரணத்தைப் பாருங்க!'இதுக்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன்?' நடிகை ஸ்ரேயா சொல்ற காரணத்தைப் பாருங்க!

    ஷூட்டிங் ரத்து

    ஷூட்டிங் ரத்து

    இதைத் தடுக்க அனைத்து நாடுகளும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழிலாளர்களும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மக்களிடையே பேசும்போது ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் மூலம் ஒளி ஏற்றி, கொரோனாவுக்கு எதிரான செயல்பாட்டில் மக்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    வேலைக்காரன்

    வேலைக்காரன்

    பிரதமர் சொன்ன ஒளியேற்றும் செயல்பாடு, சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல இருக்கிறது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இரவு 12 மணிக்கு வீட்டில் அனைவரும் மின் விளக்கு ஏற்றி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஹீரோ கேட்பார். மக்கள் ஆதரவு கொடுப்பது போல் அதன் காட்சி இருக்கும்.

    மோகன் ராஜா

    மோகன் ராஜா

    இதையடுத்து ரசிகர்கள், இதை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பிரதமர் சொன்னதையும் வேலைக்காரன் பட காட்சியையும் ஒப்பிட வேண்டாம் என்று வேலைக்காரன் பட இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை, கனவில் கூட நாம் நினைத்திருக்க மாட்டோம்.

    ஒப்பிடவேண்டாம்

    ஒப்பிடவேண்டாம்

    படத்தில் வரும் சூழ்நிலையும் இப்போதைய சூழலும் வேறு, வேறு. இருந்தாலும் யோசனை ஒன்றுதான். மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வரவேண்டும் என்பதுதான் அது, இருந்தாலும் அதையும் இதையும் ஒப்பிடவேண்டாம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவர்களும் நிபுணர்களும் மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் பீதியடையாமல் அமைதிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Mohan raja says, 'Dont compare PM's lights on request with scenes in Velaikkaran'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X