தப்பு தப்பா எழுதாதீங்க… டி. ராஜேந்தர் உருக்கம்
என் மகன் யாரைக் காதலித்தாலும் மருமகளாக ஏற்பேன் என்றுதான் சொன்னேன் ஹன்சிகா பெயரை நான் சொல்லவில்லை என்று நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வார இதழ் பேட்டி ஒன்றில் ஹன்சிகாவை சிம்பு காதலித்தால் மருமகளாக ஏற்றுக் கொள்வேன் என்று டி. ராஜேந்தர் கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால் தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும் தவறாக எழுதுவிட்டனர் என்றும் தற்போது கூறியுள்ளார் டி.ராஜேந்தர். நாங்களும் மனிதர்கள்தான். எதையாவது எழுதி எங்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஆர்யா சூர்யா
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் ராம. நாராயணன் தயாரித்து இயக்கும் படம், ‘ஆர்யா சூர்யா'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய டி.ராஜேந்தர், தன்னுடைய மகனைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

நடிகை பெயரை சொல்லவில்லை
"என் மகன் யாரைக் காதலித்தாலும் எந்த நடிகையை காதலித்தாலும் நான் மருமகளாக ஏற்பேன் என்று ஒரு பத்திரிகையாளரிடம் சொன்னேன். அவரோ ஒரு ஹன்சிகாவின் பெயரைப் போட்டு அவரை நான் மருமகளாக ஏற்பேன் என்று சொன்னதாக செய்தி வெளியிட்டார். ஆனால் நான் எந்த நடிகையின் பெயரையும் சொல்லவில்லை.

நயன்தாரா பற்றி….
இப்படித்தான் முன்பு நயன்தாரா என்ற நடிகையையும் என் மகனுடன் சேர்த்து எழுதினார்கள். ஆனால் அந்த நடிகையோ வேறொருவருடன் சேர்ந்து, அவர்களது குடும்பத்தை பிரித்து, இப்போது புதிதாக ஒருவருடன் என இப்படி செல்வதையெல்லாம் நீங்கள் எழுதுவது கிடையாது.

சிம்பு பற்றி….
என் மகன் சிம்பு அடுத்து ஒரு நடிகையை காதலிக்கிறான் என்று மட்டும் தொடர்ச்சியாக எழுதுறீங்க.. அது ஏன்?.

என்னை மதிக்கிறான்
ஐ.டி கம்பெனியில 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டாலே பசங்க அப்பாவையும், அம்மாவையும் மதிக்காம இருக்கிற இந்த காலத்துல கோடிக்கணக்குல பணம் சம்பாதிச்சாலும் இப்போதும் கூட என் மகன் எங்களை மதிக்கிறான். அந்தளவுக்கு அவன் ரொம்ப நல்லவன். இதுதான் தமிழ்ப்பண்பாடு அப்படிப்பட்ட ஒரு நல்ல பையன் சிம்பு என்று கூறி கண்கலங்கினார்.

இஷ்டத்துக்கு எழுதாதீங்க
உங்களுக்கு ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். நாங்களும் மனுஷங்க தான். அதை மறந்துட்டு இஷ்டத்துக்கு இப்படி எழுதாதீங்க என்றும் கூறினார்.

126 வது படம்
‘ஆர்யா சூர்யா' ராம.நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 126 படம். இதில் விஷ்ணுப்ரியன், நட்சத்திரா, ருக்ஷா, டாக்டர் சீனிவாசன், கங்கை அமரன், டி.ராஜேந்தர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications