விஜயகாந்தை இப்படியெல்லாம் தொல்லை பண்ணாதீங்க.. கஷ்டமா இருக்கு.. இயக்குநர் பாண்டிராஜ் வேதனை!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் தேமுதிக கட்சி மீட்டிங்கிற்கு வந்ததை பார்த்து மனசு கஷ்டமாகி விட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த் குறித்து ஏகப்பட்ட தப்பான வதந்திகள் வெளியான நிலையில், பிரேமலதா விஜயகாந்த் வீடியோ போட்டு கேப்டன் நலமுடன் உள்ளார் என்றும் தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி எங்களை கஷ்டப்படுத்தாதீங்க என கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது கேப்டனை கஷ்டப்படுத்தாதீங்க என பாண்டிராஜ் ட்வீட் போட்டுள்ளார்.

எப்படி இருந்த மனுஷன்: தமிழ் சினிமாவில் பல ஆக்ஷன் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து ஏகப்பட்ட எதிரிகளை சும்மா புரட்டி எடுத்து நடித்துள்ளார். லெஃப்ட் லெக்கை சுழற்றி கேப்டன் அடிக்கும் அடி மீண்டும் வேண்டும் என மன்சூர் அலி கான் எல்லாம் உருக்கமாக அறிக்கை விட்டு இருந்தார். சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மருத்துவமனையில் இருந்து குணமாகி விஜயகாந்த் வீடு திரும்ப வேண்டும் என வேண்டி வந்த நிலையில், ரசிகர்களின் பிரார்த்தனை காரணமாக மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார் விஜயகாந்த்.
அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்: இந்நிலையில், தேமுதிக செயற் குழு கூட்டத்திற்கு விஜயகாந்தை அழைத்து வந்து பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக பதவியேற்றார். மேலும், இனிமேல் விஜயகாந்த் தேமுதிக தலைவராக இருக்க மாட்டார் என்றும் அரசியலை விட்டு ஒதுங்கி ஓய்வெடுக்கப் போகிறார் என்றும் அறிவித்துள்ளனர்.
பாண்டிராஜ் வேதனை: இந்நிலையில், பசங்க, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ...
பிடித்த ஒரு 'நல்ல மனிதரை ' இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு" என பதிவிட்டு தனது கோரிக்கையை வைத்துள்ளார். விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தால் இன்னும் குணமடைவார் என்று தான் அவரை அந்த விழாவுக்கு அழைத்துச் சென்றதாக தேமுதிக தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











