அரசியலுக்கு வரச் சொல்லி வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிக்கை!

By

சென்னை: அரசியலுக்கு வரச் சொல்லி தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Recommended Video

Rajinikanth திடீர் அறிக்கை! ரசிகர்களுக்கு வேண்டுகோள் | OneIndia Tamil

அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதி அது பற்றி அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், உடல் நிலையைக் காரணம் காட்டி அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்தார்.

வள்ளுவர் கோட்டம்

வள்ளுவர் கோட்டம்

ஆனால் இன்று காலை ரஜினி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

நுழைய வேண்டாம்

நுழைய வேண்டாம்

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள், இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று , இங்க நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

எப்போதும் இல்லாத

எப்போதும் இல்லாத

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன், நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியதுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பொறுப்பில் இருந்து

பொறுப்பில் இருந்து

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் அரசியலுக்கு வராதது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்றப் பதவி பொறுப்பில் இருந்தும் மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்த்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

வேதனை அளிக்கிறது

வேதனை அளிக்கிறது

கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு நன்றி. நான் ஏன் அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.

மேலும் மேலும்

மேலும் மேலும்

நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X