'அப்பா நல்லா இருக்கார்... தேவையில்லாம வதந்தி பரப்பாதீங்க...' பிரபல இயக்குனர் மகன் வேண்டுகோள்

By

சென்னை: அப்பா நலமுடன் உள்ளார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரபல இயக்குனரின் மகன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழில் பட சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருப்பவர் ஆர்.சுந்தரராஜன். நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர்.

தாராபுரத்தைச் சேர்ந்த இவர் 80 மற்றும் 90 களில் பிசியான இயக்குனர்.

மெல்லத் திறந்தது கதவு

மெல்லத் திறந்தது கதவு

இவர் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, குங்குமச் சிமிழ், திருமதி பழனிச்சாமி உட்பட பல படங்கள் இப்போது பேசப்படுகின்றன. இவர் படங்களில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இளையராஜா இசையில் அந்தப் பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

காமெடி வேடம்

காமெடி வேடம்

இவர் கடைசியாக, சித்திரையில் நிலாச்சோறு என்று படத்தை இயக்கி இருந்தார். ஏராளமான படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் ஆர்.சுந்தரராஜன். அவர் நடித்துள்ள காமெடி காட்சிகள் இப்போதும் ரசிக்க வைப்பதாக இருக்கின்றன. இவர் இப்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

வதந்தி

வதந்தி

இவரது உடல் நிலைகுறித்து சினிமா வட்டாரத்தில் நேற்று வதந்திகள் பரவியது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பலர் எழுதி வந்தனர். இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. இதையடுத்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் விசாரித்தனர். அவர் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

படப்பிடிப்பில்

படப்பிடிப்பில்

இந்நிலையில் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனின் மகன் அசோக். இணையத்தில் பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தி என தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேஸ்புக்கில், என் தந்தை ஆர்.சுந்தரராஜன் நலமாக இருக்கிறார். அவர் தற்போது சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் இருக்கிறார். அவர் உடல்நலம் தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X