தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்துகொண்டேனா..? பிரபல பிக்பாஸ் நடிகை அதிர்ச்சி.. அவசரமாக மறுப்பு!

By

சென்னை: ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்தியை பிரபல பிக்பாஸ் நடிகை மறுத்துள்ளார்.

Recommended Video

Oviya க்கு நடந்த Bigg Boss சித்திரவதை • Bigg Boss Ban

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனவர் ஜூலி.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இதன் மூலம் மேலும் பிரபலமானார். ஏராளமான பொய்களைச் சொன்னதோடு, நடிகை ஓவியாவையும் கார்னர் செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலியை வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பாளர்

பின்னர் அவர் டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார். அதைத் தொடர்ந்து அவருக்குப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் நடித்தார். பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ள ஜூலி, அம்மன் தாயி, நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

கடுமையான கலாய்

கடுமையான கலாய்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஜூலியும் ஒருவர். அடிக்கடி எதையாவது ஷேர் செய்துகொண்டிருப்பார். அவரது டிக்டாக் வீடியோக்கள் அதிகமாக வைரலாகின. சில நெட்டிசன்கள் அவரை கடுமையாகக் கலாய்ப்பதை வழக்கமாகச் செய்து வருகின்றனர். அதை நடிகை ஜூலி கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் அவர் பற்றி பரபரப்பு தகவல் வெளியானது.

காதல் ரகசிய திருமணம்

காதல் ரகசிய திருமணம்

அவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் ஜூலிக்கு ரகசியமாக கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்துவிட்டதாகவும் சோசியல் மீடியாவில் திடீரென செய்திகள் பரவின. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நடிகை ஜூலி, அதை மறுத்துள்ளார். அந்தச் செய்தியை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஜூலி, அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X