பீஸ்ட் திரைப்படத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்… நடிகர் ஆரி காட்டம்

சென்னை : விஜய் கதாநாயகனாக நடித்து இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ் புத்தாண்டில் வெளியானது.

பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனிடையில் நடிகர் ஆரி பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிராக கருத்து சொல்லும் ஆட்களுக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார்.

100 கோடி

100 கோடி

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு உலகெங்கிலும் ரிலீசானது பீஸ்ட் திரைப்படம். கதாநாயகனாக விஜய் நடித்த கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களோடு யோகிபாபு இயக்குனர் செல்வராகவன் கிங்ஸ்லி போன்ற பலரும் நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பீஸ்ட் திரையிட்ட முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் குடும்பங்கள் சிறுவர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். தற்போது வரை இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்ததாகவும் உலகெங்கிலும் 210 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

Beast vs KGF 2

Beast vs KGF 2

பீஸ்ட் வெளியான மறுநாள் ஏப்ரல் 14ஆம் தேதி கே ஜி எஃப் 2 ரிலீஸ் ஆனது. கேஜிஎப் 1 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. தற்போது கேஜிஎப் 2 ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் என்ன சொல்லும்படி செய்துள்ளது. இதனிடையே ஒரு குறிப்பிட்ட மக்கள் கேஜிஎப் 2 வை பீஸ்ட் உடன் ஒப்பிட்டு படத்தை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமாவில் இருக்கும் சில முக்கியஸ்தர்களும் பீஸ்ட் படத்தின் தரத்தை குறிப்பிட்டு அதை தூற்றி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பீஸ்ட் vs கேஜிஎப் 2 எனும் சண்டை பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் தூற்றும் நெல்சன்

ரசிகர்கள் தூற்றும் நெல்சன்

கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன் டிலிப்குமர். இது அவரது முதல் படம் நயன்தாரா கதாநாயகி நடித்த இந்த படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி எதிர்பாராத ஹிட்டானது. அதன்பிறகு சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். இந்த படமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ஹிட்டானது. சிவகார்த்திகேயன் சினிமாக்களில் அதிக லாபம் தந்த படமாக டாக்டர் உள்ளது. மூன்றாவது படமாக விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அறிவிப்பு வெளியானதும் எதிர்பார்ப்பு எகிற வைத்தது. படத்தின் பஸ்ட் லுக், டீசர், ட்ரைலர், பாடல்கள் வெளியீடு என அனைத்தும் எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனதும் அதுவரை அதன் மேல் வைக்கப்பட்டிருந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் நெல்சன் தான் என அவர் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.

Recommended Video

Beast VS KGF 2 | Box Office Collection | Filmibeat tamil
ஆரி காட்டம்

ஆரி காட்டம்

இணைய தளங்களில் தொடர்ந்து நடைபெறும் கேஜிஎப் 2 vs பீஸ்ட் படங்களின் விவாதங்கள் குறித்து நடிகர் ஆதி தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் படங்களின் சம்பந்தமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்து கேஜிஎப் 2 படத்துடன் பீஸ்ட் படத்தை ஒப்பிட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் தரம் குறைந்துள்ளது எனும் பிம்பத்தை கட்டமைக்க முயற்சிகள் நடக்கிறது. கேஜிஎப் 2 படத்தை புகழ்ந்து பேசுங்கள் ஆனால் அதற்காக பீஸ்ட் படத்தை தப்பாக பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். சினிமா அனைவரையும் வாழ வைக்கும். ஒரு படத்தை பாராட்டுபவனையும் வாழவைக்கும் அதே சினிமாவை தோன்றியவனையும் வாழவைக்கும். அதான் சினிமா என காட்டமாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X