twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யை குறைச்சு எட போட்டா இதான் நிலைமை... ராதாரவி பளீர் பேச்சு!

    |

    சென்னை : விஜய்யின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது

    அந்த வகையில் மாஸ்டர் செய்த அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் பீஸ்ட் வெளியாக உள்ளது

    இந்த நிலையில் நடிகர் ராதாரவி விஜய்யை குறைத்து எடை போடாதீர்கள்.. போட்டால் இதுதான் நிலைமை என நேர்காணல் ஒன்றில் விளாசியுள்ளார்.

    4வது திருமணத்துக்கு தயாரான கிம் கர்தாஷியன்.. 28 வயது நபரை டேட்டிங் செய்யும் 41 வயது சூப்பர் மாடல்!4வது திருமணத்துக்கு தயாரான கிம் கர்தாஷியன்.. 28 வயது நபரை டேட்டிங் செய்யும் 41 வயது சூப்பர் மாடல்!

    பீஸ்ட்

    பீஸ்ட்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. மாஸ்டர் படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த விஜய் அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

    நேரடியாக தெலுங்கில்

    நேரடியாக தெலுங்கில்

    பீஸ்ட் வெளியாக உள்ள நிலையில் விஜய்யின் 66 வது பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகை ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தின் மூலம் விஜய் நேரடியாக தெலுங்கு திரைப்படத் துறையிலும் அறிமுகமாகிறார். விஜய் 66 தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் மீண்டும் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் பிரபல மூத்த நடிகர் ராதாரவி விஜய்யை யாரும் குறைத்து எடை போடாதீர்கள் என பேசியுள்ளார்.

    விஜய்யை குறைச்சு எட போடாதீங்க

    விஜய்யை குறைச்சு எட போடாதீங்க

    விஜய்யின் வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போக அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் பல மொழிகளிலும் அதிகமாகி வருகிறது. தமிழ் மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி விஜய்யை யாரும் குறைச்சு எட போட்டாதிங்க.. அவரை அண்டர் எஸ்டிமேட் பண்ணாதீங்க..

    இனி வரும் காலங்களில் விஜய் அரசியலுக்கு வந்தால் அப்பொழுது சூழ்நிலையைப் பொருத்து அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் மிக வெளிப்படையாக பேசியுள்ளார்.

    தலைவனாக இருக்க வேண்டுமா

    தலைவனாக இருக்க வேண்டுமா

    விஜய் நான் பார்த்து வளர்ந்த பிள்ளை இப்பொழுது இவ்வளவு பெரிய இடத்திற்கு சென்று இருப்பதை பார்க்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அரசியலில் கற்றுக் கொள்ள இன்னும் நிறையவே இருக்கு அரசியலில் வரவேண்டுமென்றால் எதிராளியை பற்றி நன்கு தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் என நடிகர் ராதாரவி வெளிப்படையாக பேசியுள்ளார் இந்த வீடியோ இப்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பீஸ்ட் நேர்காணலில் நெல்சன் உடன் பேசிய விஜய் தான் தளபதியாக இருக்க வேண்டுமா தலைவனாக இருக்க வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Dont underestimate actor vijay at any instance says radharavi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X