twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வா..?” நேரடியாக மத்திய அரசைத் தாக்கிப் பேசிய சூர்யா.. கெத்து தான்!

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    Actor Surya: அரசாங்கம் மேல் கோபத்தை தெரிவித்த நடிகர் சூர்யா

    சென்னை: எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிக்க முடியும் என நடிகர் சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்வி கொள்கைக்காக வரைவை வெளியிட்டது. அதில் இந்தியை திணிக்கும் வகையில் மும்மொழி கொள்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது.

    தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார்.

    தேசிய கல்விக் கொள்கை:

    தேசிய கல்விக் கொள்கை:

    அப்போது அவர், " மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாகச் சேரவில்லை, இன்னும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காரணத்தினால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தேறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த கல்விக்கொள்கை வரைவில், 5-ஆம் வகுப்பு முதல் நுழைவு தேர்வு, கல்வி தேர்வு என தேர்வுகள் வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

    மாணவர்களின் வாழ்க்கை:

    மாணவர்களின் வாழ்க்கை:

    சரியான சமமான கல்வி இல்லாமல் எப்படி கல்வி தேர்வுகள் வைக்க முடியும்? இந்த புதிய கல்விக்கொள்கை என்பது முப்பது கோடி மாணவர்களின் வாழ்க்கை பற்றியது. இந்த கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்கள் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால் மட்டுமே மாற்ற முடியும் என்கின்ற போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    மாணவர்கள் பாதிப்பு:

    மாணவர்கள் பாதிப்பு:

    தற்போது ஓராசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது, அவ்வாறு இருக்கையில் எப்படி அங்கு படிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற கொள்கைகளுக்கு ஏற்ப தேர்வுகளை எழுத முடியும். ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கின்றனர், இதுபோன்று மொழிகளை திணிப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் .

    பாதியிலேயே நிற்கும்:

    பாதியிலேயே நிற்கும்:

    ஏனெனில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற கல்விகள் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. 5-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும், 6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். 60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியம், அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்?

    எதற்கெடுத்தாலும் நுழைவுத்தேர்வா?

    எதற்கெடுத்தாலும் நுழைவுத்தேர்வா?

    பள்ளிகள் மட்டுமல்லாது கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வு வைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிக்க முடியும், ஒரு வேலை படிக்க முடியாமல் அவர்கள் தேர்வுகளில் தோல்வியடைந்தால் பின் எப்படி அனைத்து மாணவர்களும் படிக்க முடியும்.

    யாருக்கு லாபம்?

    யாருக்கு லாபம்?

    நுழைவுத் தேர்வுகளால் தனியார் பயிற்சி மையங்கள் அதிகரிக்கும், தனியார் பயிற்சிப்பள்ளிகள் நாடு முழுவதும் ரூ.5000 கோடி வருமானம் ஈட்டுகின்றன, கற்பித்தல் என்ற முறைக்கு பதில் கோச்சிங் சென்டர் முறை வரும் .அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பின் பள்ளி கல்லூரிகளின் தேவைகள் இல்லாமல் போய்விடும்." என அவர் கூறினார்.

    Read more about: suriya சூர்யா
    English summary
    "Doors are closed for rural students in National Education Policy Draft" says Actor Suriya addressing to government school students at a press meet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X