டபுள் விஜய்சேதுபதி.. டபுள் டாப்சி.. வேற லெவலில் உருவாகும் ஃபேண்டசி படம்.. சூடு பிடிக்கும் ஷூட்டிங்
சென்னை: விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கி மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், சன் டே கூட லீவு எடுக்காமல் லாக்டவுன் லீவுகளை விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவினர் சமம் செய்ய வேலை பார்ப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியிருந்தார்.
இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஃபேண்டசி படம்
அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்சி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஃபேண்டசி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் நடைபெற்று வருகிறது.

டபுள் தமாக்கா
இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை டாப்சி ஆகிய இருவருக்கும் டபுள் ஆக்ஷன் ரோலாம். சம கால கதாபாத்திரம் மற்றும் பீரியட் கதாபாத்திரம் என இரு கதாபாத்திரங்களில் இவர்கள் இருவருமே நடித்து வருகிறார்களாம். இதனால் நிச்சயம் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா தான் என்கின்றனர்.

ஏற்கனவே
கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன் படத்திலும் விஜய்சேதுபதி இரு வேடங்களில் நடிக்கிறார் என்கிற செய்திகள் வெளியானது. ஆனால், படத்தில் சுவாரஸ்யமாக ட்விஸ்ட் வைத்து இரு வேடங்கள் அல்ல, ஒரு கேரக்டர் தான் என கலக்கி இருந்தார் விஜய்சேதுபதி.

படு பிசி
நடிகை டாப்சி மற்றும் நடிகர் விஜய்சேதுபதி கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. ரிலீசுக்கு சில படங்கள் காத்திருக்கின்றன. சில படங்கள் ஷூட்டிங்கிற்காக காத்து இருக்கின்றன. இதனால், இரவு பகல் பாராமல், பெரிய ஓய்வு எடுத்தாச்சு இனிமே ரெஸ்ட் இல்லாமல் ஷூட்டிங் பண்ண வேண்டியது தான் என்பதில் இருவரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சிஜி பணிகள்
ஓ மை கடவுளே படத்தில் விஜய்சேதுபதி கடவுளாக நடித்து சிஜி அட்டகாசங்களை எல்லாம் கொஞ்சமாக காட்டி இருந்தார். இந்த படம் முழுக்க பீரியட் மற்றும் சம கால கதை கலந்த ஃபேண்டசி படம் என்பதால், ஏகப்பட்ட சிஜி பணிகளும், மாயாஜாலங்களும் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











