இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன்.. வெளியேறிய அந்த இரண்டு லட்டுக்கள் யார் யார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஞாயிற்றுக் கிழமை ஷூட்டிங் சற்றுமுன் நிறைவடைந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வருண் மற்றும் அக்ஷரா வெளியேறி உள்ளதாக ஷாக்கிங் தகவல் கசிந்துள்ளது.
கடந்த அக்டோபர் 3ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இறுதிகட்டத்தை நோக்கி நடைபோடுகிறது.
கடந்த சில வாரங்களாகவே டபுள் எவிக்ஷனை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் பிக் பாஸ் வீட்டில் நடந்திருப்பது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

டபுள் எவிக்ஷன்
கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் வீட்டில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாக சொல்லிக் கொண்டு வந்த நிலையில், எப்போ டபுள் எவிக்ஷன் இருக்கும் என ரசிகர்கள் இமான் வெளியேற்றத்தில் இருந்தே எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அக்ஷரா அவுட்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைவான ஓட்டுகளுடன் அக்ஷரா தான் டேஞ்சர் ஜோனில் உள்ளார் என்றும் அவர் தான் வெளியேறப் போகிறார் என அன் அஃபிஷியல் கணக்கெடுப்பில் தெரிய வந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார் அக்ஷரா என்கிற தகவல் லீக்காகி விட்டது.

கூடவே வருண்
பிக் பாஸ் வீட்டில் இணை பிரியாத ஜோடிகளாக சுற்றித் திரிந்த அக்ஷரா மற்றும் வருண் ஒன்றாக டபுள் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பிக் பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. வருணின் மாமா ஐசரி கணேசன் பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தந்து ஜோஷ்வா இமை போல் காக்க டிரைலரை வெளியிட்ட நிலையில், வருண் எவிக்ட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை படத்தின் புரமோஷனுக்காக வெளியேறுகிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பாவனி எஸ்கேப்
அமீர் தந்த முத்தத்துக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாவனி அக்கா வந்து அட்வைஸ் பண்ணியும் கேட்காமல் தொடர்ந்து அவருடன் பேசிக் கொண்டு இருப்பது ரசிகர்களை எரிச்சலூட்டிய நிலையில், இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பாவனி குறைவான ஓட்டுக்களை பெற்று இருந்தார். ஆனால், பாவனியின் ஆர்மியினர் ஒட்டுமொத்த ஓட்டுக்களையும் அவருக்கே போட்டு காப்பாற்றி உள்ளார்களா? இல்லை பிரியங்காவை தாண்டி பாவனியும் அமீரும் இந்த சீசனுக்கு கன்டென்ட் தருகிறார்கள் என வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

டாப் 5 யாரு?
இதுவரை 9 பேர் உள்ள பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் வெளியேறும் பட்சத்தில் மீதமுள்ள 7 பேரில் டாப் 5 போட்டியாளர்கள் யார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சீசனின் டாப் 3 போட்டியாளர்கள் ராஜு, பிரியங்கா மற்றும் தாமரை என அதிகப்படியான ரசிகர்கள் கூறி வரும் நிலையில், மீதமுள்ள 2 இடத்திற்கு சிபி, பாவனி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அபிநய் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











