அவனா? அவளா? ஒரு மிரட்டலான ஃபேண்டஸி சஸ்பென்ஸ்.. 'டபுள் ஆக்குபன்சி' முதல் நாள் வசூல்!

சென்னை: தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் லாஜிக் மற்றும் கமர்ஷியல் எல்லைகளைத் தாண்டி, ஹாலிவுட் ரேஞ்சுக்கு வித்தியாசமான ஃபேண்டஸி கதைகள் வெளியாகும். அந்த வரிசையில், அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில், நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் கலவையான விமர்சனங்களையும் பெற்று வரும் புதிய திரைப்படம் தான் 'டபுள் ஆக்குபன்சி'

வித்தியாசமான கதை: 15 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வரும் போஸ் வெங்கட் - வினோதினி தம்பதிக்கு, பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்த குழந்தைக்கு பின்னால் ஒரு விசித்திரமான அதிர்ச்சி இருக்கிறது. அந்தக் குழந்தை காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஆணாகவும், மாலை 6 மணிக்கு மேல் மறுநாள் காலை 6 மணி வரை பெண்ணாகவும் மாறுகிறது. இந்த ரகசியத்தைத் தெரிந்து அதிர்ச்சியடையும் பெற்றோர், சமூகம் இதை எப்படி ஏற்கும் எனப் பயந்து, யாருக்கும் தெரியாமல் அந்தப் பிள்ளையை வீட்டுக்குள்ளேயே வைத்து நல்ல படியாக வளர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பிள்ளை வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டும்போது, எதிர்பாராத ஒரு விபத்தில் போஸ் வெங்கட்டும் வினோதினியும் உயிரிழக்கிறார்கள். பெற்றோர் இறந்த பிறகு, தனித்து விடப்படும் அந்தப் பிள்ளைக்குத் தன் உடம்பில் இருக்கும் விசித்திரமான 'பகல் ஆண், இரவு பெண்' ரகசியம் தெரிந்ததா? இல்லையா? இந்தச் சமூகத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் இந்த 'டபுள் ஆக்குபென்சி' படத்தின் கதை

Double Occupancy box office
Photo Credit:

அட்டகாச நடிப்பு: இந்த வித்தியாசமான ரோலில் பகல் நேரத்து நாயகனாக சந்தோஷ் நடித்துள்ளார். ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடைப்பட்ட அந்தச் சிக்கலான உணர்வுகளையும், சவால்களையும் அவர் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல, இரவு நேரத்து நாயகியாக வரும் ரேஷ்மாவும் தனது கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து, மிக நேர்த்தியான மற்றும் எமோஷனலான நடிப்பைக் கொடுத்துள்ளார். போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதியின் எதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது

முதல் நாள் வசூல்: வித்தியாசமான கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும், முதல் நாளிலேயே இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது. Sacnilk தகவலின் படி படத்தின் 73 காட்சிகள் ஓடிய இந்த படம் முதல் நாளில் 9 லட்சத்தை வசூலித்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகள் வந்துகொண்டிருப்பதால், இந்த வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X