யூ டியூபில் 100 மில்லியன் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன்.. சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக திகழ்பவர் சிம்பு.
தற்போது சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், S.J. சூர்யா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு.
இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்
இந்த படம் கிட்ட தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிம்பு ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிடும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் ட்ரெண்ட் ஆனது.

கொரோனா தொற்று
இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். யுவன் - சிம்பு கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆதலால் இந்த படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் படக்குழு பாடல்களை வெளியிடாமல் வைத்துள்ளது.

வைரலான பாடல்
இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்றுள்ள மாங்கல்யம் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து சிம்பு ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட் கிடைத்துள்ளது.

டபுள் ட்ரீட்
சமீபத்தில் சிம்பு உடல் எடையை குறைத்து படங்களில் ஒப்பந்தமாகி சமூக வலைத்தளங்களிலும் இணைந்தார். அவ்வப்போது புகைப்படங்கள் பதிவு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் சேர்ந்து குறுகிய காலத்தில் 1 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ளார் சிம்பு. யூ டியூபில் 100 மில்லியன் இன்ஸ்டாகிராமில்
1 மில்லியன் என சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











