நடிக்க வந்ததில் இருந்து இதுவரை செய்யாத காரியத்தை செய்யும் விஜய் சேதுபதி

By Siva

சென்னை: சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் சங்கத்தமிழன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

Double treat for Vijay Sethupathi fans in Sanga Tamizhan

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடிப்பது தெரிய வந்துள்ளது. ஆம், விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இரண்டு பேருமே ஹீரோ தான்.

விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்திவிடுவார். இரட்டை கதாபாத்திரங்களில் நிச்சயம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை மிரள வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு விஜய் சேதுபதிக்கு ராஷி கன்னாவும், மற்றொருவருக்கு நிவேதா பெத்துராஜும் ஜோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. ராஷி கன்னா தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டார்.

நிவேதா பெத்துராஜ் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இந்த படத்தில் நாசர், ரவி கிஷன், அசுதோஷ் ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக சங்கத்தமிழன் இருக்குமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X