எம்ஜிஆர் கேட்டா பாலய்யா மாதிரி பொம்மை வருது.. லியோவை விட இதுல சிஜி அதிகம்.. டபுள் டக்கர் சீக்ரெட்!
சென்னை: அறிமுக இயக்குநர் மீரா மகதி இயக்கத்தில் தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள டபுள் டக்கர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த சம்மருக்கு குழந்தைகளை டார்கெட் செய்யும் விதமாக லெஃப்ட், ரைட் என இரு அனிமேஷன் பொம்மைகள் ஹீரோவின் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப் போடுகின்றன என்கிற வித்தியாசமான முயற்சியுடன் இந்த படம் உருவாகி உள்ளது.
விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கோஸ்ட் கெட்டப்பில் வந்து ஆரம்பிக்கலாமா? என சொல்வதில் ஆரம்பித்து, ரோலக்ஸ் சூர்யா, எம்ஜிஆர் கடைசியாக காந்தாரா வரை அந்த பொம்மைகள் கெட்டப் போட்டுக் கொண்டு வந்து பண்ணும் காமெடி காட்சிகள் டிரெய்லரிலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளது.

லியோ படத்தை விட இந்த படத்துக்கு சிஜி காட்சிகளுக்கு அதிகம் மெனக்கெட்டுள்ளோம் என படத்தின் ஹீரோ தீரஜ் கூறிய நிலையில், அந்த அனிமேஷன் பொம்மை காட்சிகளை எப்படி படமாக்கினோம் என்பது குறித்து இயக்குநர் மீரா மகதியும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டபுள் டக்கர் படம்: இந்த சம்மருக்கு குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட உள்ள நிலையில், குழந்தைகளை டார்கெட் செய்து தமிழில் ஒரு அனிமேசன் பொம்மைகள் இடம்பெற்றுள்ள படம் நாளை வெளியாகிறது. டபுள் டக்கர் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை மீரா மகதி என்பவர் இயக்கி உள்ளார். தீரஜ், ஸ்மிருதி வெங்கட் லீடு ரோலில் நடித்துள்ளனர்.
எம்ஜிஆர் பொம்மைக்கு பதில் பாலய்யா: சிம்பியாசிஸ் டெக்னாலஜி என்கிற இந்தியாவை சேர்ந்த அனிமேஷன் நிறுவனம் உலகளவில் ஹாலிவுட் படங்களுக்கே அனிமேஷன் பணிகளை செய்து வருகிறது. பொதுவாகவே கார்ட்டூன்களுக்கு மட்டுமே வேலை பார்த்து வந்த அந்த நிறுவனம் முதல் முறை படத்துக்கு எங்களுடன் பணியாற்றி உள்ளனர். எம்ஜிஆர் பொம்மை கேட்டால் ஆரம்பத்தில் பாலய்யா பொம்மையை ரெடி பண்ணி தந்தனர். அதன் பின்னர், ஏகப்பட்ட கரெக்ஷன்கள் எல்லாம் பார்த்து அனிமேஷனுக்கு மட்டுமே 1 வருடம் எடுத்துக் கொண்டது எனக் கூறியுள்ளார்.
லியோ படத்தை விட: தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஓபனிங் காட்சியில் வரும் அந்த ஹைனா காட்சியை அட்டகாசமாக ஹாலிவுட் தரத்துக்கு சிஜி செய்து எடுத்திருப்பார்கள். அந்த படத்தை விட எங்க படத்துக்குத்தான் அதிக நாட்கள் சிஜி பணிகள் நடைபெற்றன படத்தின் ஹீரோ தீரஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











