Venkat prabhu: என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் கோட்-அ.. விஜய் போஸ்டரையே கலாய்த்த டபுள் டக்கர் டீம்!
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் இந்த வாரத்தில் மாஸ்கோ செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இம்மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் முழுமையாக நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அடுத்தடுத்த சிறப்பான அப்டேட்களுடன் இந்தப் படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அப்பா -மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், அதில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய்யை பார்க்க முடிந்தது. மகன் விஜய்யின் லுக்கிற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை வெங்கட்பிரபு பயன்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்து வருகிறார். இதில் ஒரு கெட்டப் வில்லன் ஷேடில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஒரு பாடலை விஜய் பாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
டபுள் டக்கர் படம்: ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கேரளா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் இந்த போஸ்டர்களில் விஜய் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது விஜய்யின் இந்த போஸ்டர்களை கலாய்க்கும்வகையில் டபுள் டக்கர் படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நாளைய தினம் இந்தப் படம் வெளியாகவுள்ள சூழலில் அடுத்தடுத்த பிரமோஷன்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அனிமேஷன் கேரக்டர்கள்: இந்தப்படத்தில் அனிமேஷன் கேரக்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரைட் மற்றும் லெஃப்ட் என அவற்றிற்கு பெயரிடப்பட்டுள்ளன. நாயகன் வாழ்க்கையில் இணையும் இந்த கேரக்டர்களினால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் சுவாரஸ்யங்களை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் போஸ்டரை கலாய்க்கும் வகையில் கோட் (ஆடு) மீது அந்த அனிமேஷன் கேரக்டர்கள் பயணிக்கும்வகையில் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய்யின் போஸ்டரில் அப்பா -மகன் இருவரும் பைக்கில் பயணிப்பதாக அமைந்திருக்கும்.
வெங்கட்பிரபு வரவேற்பு: இந்நிலையில் இந்த போஸ்டரை தற்போது GOAT படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் GOAT-அ என்று கேட்டுள்ளார். மேலும் தன்னுடைய சிரிப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். நாளைய தினம் டபுள் டக்கர் படம் ரிலீசாகவுள்ளதை குறிப்பிட்டு தீரஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ள டபுள் டக்கர் படத்தை மீரா மஹதி இயக்கியுள்ளார். படத்தில் தீரஜ்ஜிற்கு ஸ்மிருதி வெங்கட் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், முனீஸ்காந்த் உள்ளிட்டவர்களும் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











