இந்தியாவில் இருந்து இதுமட்டும்தான் தேர்வாமே.. பஹாமாஸ் பட விழாவில் டாக்டர் அமர் நடித்துள்ள படம்!
சென்னை: பஹாமாஸ் நாட்டில் நடக்கும் உலகப் பெண்கள் திரைப்பட விழாவில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் நடித்துள்ள படம் தேர்வாகி உள்ளது.
தாய்நிலம் என்ற படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன்.

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த தாய்நிலம் நிறைவுபெற்று ரிலீசிற்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இவர் மலையாளத்தில் 'பக்ஷிகளுக்கு பறயான் உளது' (பறவைகள் சொல்ல நினைப்பது) என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பஹாமாஸ் நாட்டின் உலக பெண்கள் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக
இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு திரைப்படமும் இதுதான்.

சுதா ராதிகா என்ற பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட இந்த படத்தில் பறவைகள் ஆராய்ச்சியாளராக தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் டாக்டர்
அமர் இராமச்சந்திரன். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள இந்தப் படம் பஹாமாஸில் பெண்கள் திரைப்பட விழாவில் பங்கேற்பதால் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மிகப் பெருமையாக உள்ளது எனக் குறிப்பிட்டார் டாக்டர் அமர் ராமச்சந்திரன்.
இந்த படத்தில் அமர் ராமச்சந்திரன், மீனாக்ஷி, நீலாஞ்சனா, லைலா, நமிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர். டாக்டர் அமர் இராமச்சந்திரன் ஏற்கெனவே நடித்து தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் தாய்நிலம், இந்த வருடம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்க தயாராகி வருகிறது.
ஒரே வருடம் இரண்டு திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன்.


Click it and Unblock the Notifications











