ரஞ்சனா நாச்சியார் நாடகம் அம்பலம்.. ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய பிரபலம்!

சென்னை: நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்களை அடித்தது விளம்பரத்திற்காக நடத்திய நாடகம் என்று பிரபலம் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக உள்ள நடிகை ரஞ்சனா நாச்சியார், அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Dr. Kandaraj said in an interview that Ranjana Nachiyar beat the students for publicity

ரஞ்சனா நாச்சியார்: நேற்று இவர் கெருகம்பாக்கம் பகுதியில் அரசுப் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்து வந்த மாணவர்களை அடித்து சரமாரியாக திட்டினார். பேருந்தில் இருந்து மாணவர்களை இறக்கிவிட்டது மட்டுமில்லாமல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை ஒருமையில் பேசினார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

நிபந்தனை ஜாமீன்: அதையடுத்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் நடிகை மீது புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

டாக்டர் காந்தராஜ் பேட்டி: இந்த விவகாரம் குறித்து, மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி அளித்து உள்ளார். அதில், இந்த சம்பவத்தை நான் பார்க்கும் போது இது ஒரு நாடகமாகத்தான் தெரிகிறது. பாஜக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இது போன்ற ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். பேருந்தை நிறுத்தியது, மாணவர்களை திட்டியது எல்லாம் சரி, ஆனால் அவர்களை அடிக்கும் உரிமை அவருக்கு யார் கொடுத்தது.

எல்லாம் நாடகம்: அது மட்டும் இல்லாமல் படிக்கட்டில் இருந்த பசங்க எல்லாம் பெரியவர்கள், அவங்க எல்லாம் இறங்கி விட்டார்கள். ஆனால், இவர் உள்ளே இருந்த சிறுவர்களை வெளியே இழுத்து அடிக்கிறார். அந்த வீடியோவை பார்க்கும் போது ஆட்களை செட்டப் செய்து கொண்டு தான் பேருந்தை நிறுத்தி அலப்பறை செய்தது போல தெரிகிறது.

இதுவந்து மக்கள் நன்றாக இருப்பதற்கு செய்தது போல தெரியவில்லை. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக செய்த வேலை என்று டாக்டர் காந்தராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X