சுஜா வருணிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கனிமொழி.. யாருன்னு தெரியுதா?

Recommended Video

பிக் பாஸ் சுஜாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது | Bigg Boss Suja Blessed with BOY baby

சென்னை: செலிபிரிட்டிகள் வரிசையில் நடிகை சுஜா வருணிக்கும் விஐபி டாக்டர் கனிமொழிதான் பிரசவம் பார்த்துள்ளார்.

நடிகை சுஜா வருணி தான் காதலித்த சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவக்குமாரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான சுஜாவருணி கடந்த திங்கள் கிழமை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை க்ளட்நைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜா வருணிக்கு கடந்த புதன் கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பூரிப்புடன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுஜா வருணி தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழிக்கு நன்றி தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

அரசியல் பின்புலம்

அரசியல் பின்புலம்

மருத்துவர் கனிமொழி, மறைந்த திமுக எம்பி என்விஎன் சோமுவின் மகள் ஆவார். இவரது தாத்தா என்பிஎன் நடராஜன், 1938ஆம் ஆண்டிலேயே பெரியாரின் நீதிக்கட்சியில் உறுப்பினராக இருந்தார்.

டாக்டர் கனிமொழி

டாக்டர் கனிமொழி

பின்னர் அறிஞர் அண்ணா திமுகவை தொடங்கியபோது அவருடன் சேர்ந்தார் நடராஜன். 1967ல் அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் நடராஜன். இவரது மகன் வயிற்று பேத்திதான் டாக்டர் கனிமொழி.

திமுக சார்பில் போட்டி

திமுக சார்பில் போட்டி

க்ளடு நைன் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக உள்ளார் கனிமொழி. கடந்த சட்டசபைத் தேர்தலில் தியாகராய நகர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட டாக்டர் கனிமொழிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நிஷாவுக்கு பிரசவம்

டாக்டர் கனிமொழி கடந்த ஜூன் மாதம் நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷாவுக்கு பிரசவம் பார்த்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது டாக்டர் கனிமொழி மற்றும் அவரது குழுவினரின் சேவையை பார்த்து வியந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஃபேஸ்புக்கில் தனது மனைவி, குழந்தை, டாக்டர் கனிமெழி மற்றும் அவர்களின் குழுவுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X