உதயம் தியேட்டர் மூடக்காரணம்.. யாரு வாங்குறானு தெரியுமா? பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: செல் போன், ஓடிடி போன்றவற்றால் நாளுக்கு நாள் திரைப்படங்களின் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. அனைவரும் வீட்டில் இருந்தே நினைத்த நேரத்தில் படம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நிலைமை இருப்பதுதான், இன்று பல திரையரங்குகள் மூடப்பட்டு வருவதாக டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
சென்னை அசோக் பில்லர் பகுதியில் அமைந்திருக்கிறது பிரபல திரையரங்கான உதயம் திரையரங்கம். உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என நான்கு திரையரங்குகளைக் கொண்டது இந்த காம்ப்ளக்ஸ். கடந்த சில நாட்களாகவே இந்த காம்ப்ளக்ஸில் திரைப்படங்கள் வெளியாவது குறைந்து கொண்டே வந்தது. சில வாரங்களில் 2 திரையரங்குகளில் மட்டும் படம் வெளியானது. சில வாரங்களில் எந்தத் திரையரங்கிலும் படம் ஓடாமல் பூட்டப்பட்டிருந்த நிலையில், இந்தத் திரையரங்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதான் காரணம்: இதுகுறித்து பேட்டி அளித்துள்ள விமர்சகர் டாக்டர் காந்தராஜ், தொலைக்காட்சி வளர்ச்சி அடைந்த பின், சினிமா வரத்து குறையத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் தொலைக்காட்சிக் கூட எடுபடாமல் தான் இருந்தது. ஆனால், தொலைக்காட்சியை தனியார் நிறுவனங்கள் வாங்கிய பிறகு, டிவியின் ஆதிக்கம் அதிகமானது. அதில், சீரியல்கள் ஒளிபரப்பானதும் பெண்கள் மொத்தமாக சீரியல் பக்கம் சென்றுவிட்டார்கள். பெரும்பாலான தென்னிந்திய படங்களே பெண்களை வைத்துத்தான் எடுக்கப்பட்டு வந்தது. காதல் தோல்வி, மாமியார் கொடுமை, ஏமாற்றம், அழுகை, கண்ணீர் எல்லாம் இருக்கும். இவை அனைத்துத் தற்போது சீரியலில் வந்துவிட்டதால் பெண் சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். இதனால், தியேட்டருக்கு வரும் பெண்களின் வருகை குறைந்துவிட்டது.

ஓடிடி வரவால்: அதுமட்டுமில்லாமல், டிஜிட்டல், ஓடிடி, செல்போன் என காலம் மாற மாற மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதுவும் ஓடிடி வந்த பிறகு, கொஞ்சம் நஞ்சம் இருந்த சினிமா பிரியர்களும் விரும்பும் நேரத்தில் கையில் போனை வைத்துக்கொண்டு படம் பார்ப்பதை விரும்புகிறார்கள். அது மட்டுமில்லாமல், பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வந்துவிட்டதால், சின்ன சின்ன தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன.
சினிமா அழிந்துவிட்டது: ஏவிஎம் ஸ்டியோ குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது பேருக்கு அங்கு ஒரு ஸ்டியோ இருக்கு, அதே போல சேலம் மார்டன் திரையரங்கம் குடியிருப்பு பகுதியாகி விட்டது. அதே போலத்தான் உதயம் தியேட்டரை காஸாகிரெண்ட் வாங்கி இருக்கு அந்த பகுதியில் குடியிருப்பாக மாற உள்ளது. இதற்கு எல்லாம் காரணம் சினிமா அழிந்துவிட்டது என்பது தான் காரணம் என்று விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











