Khushbu - பிரபுவுக்கும் குஷ்பூவுக்கும் திருமணம்?.. வெறி பிடித்து அலைந்தார்கள்.. பிரபலம் சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: Khushbu (குஷ்பூ) பிரபுவுக்கும் குஷ்பூவுக்கும் திருமணம் நடந்ததாக யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் காந்தராஜ் தெரிவித்திருக்கிறார்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட குஷ்பூ தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினிகாந்த், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தில் மாடர்ன் பெண்ணாக தோன்றி ரசிகர்களை கட்டிப்போட்டார். பிறகு அவர் நடித்த வருஷம் 16, வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்னத்தம்பி என பல படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன.

Dr. Kantharaj has said in Interview Prabhu and Khushbu got married.

டாப் நடிகை: குஷ்பூ நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டடிக்க அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தன. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக உயர்ந்தார். ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் என இரண்டு ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார்.

குஷ்பூவுக்கு கோயில்: குஷ்பூ பல மொழிகளில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்கள் அவரை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். முக்கியமாக அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு நிலைமை சென்றது. மேலும் குஷ்பூ இட்லி என்றும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்படி செம ரவுண்டு வந்த குஷ்பூ ஒரு சர்ச்சையிலும் சிக்கினார்.

பிரபுவுடன் காதல்?: அதாவது தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார் குஷ்பூ. அந்தப் படத்தில் இருவருக்குமான ஜோடி பொருத்தம் சிறப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். அந்தப் படத்தை தொடர்ந்து வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சின்னத்தம்பி, பாண்டித்துரை, உத்தம ராசா, மறவன், சின்ன வாத்தியார் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

சிவாஜியின் தலையீடு?: இருவரும் தொடர்ந்து இணைந்து நடித்ததன் விளைவாக இருவருக்கும் காதல் என்ற பேச்சு அப்போது எழுந்தது. ஆனால் அதுகுறித்து எதுவும் பேசாமல் இருவருமே அமைதியாக இருந்தார்கள். மேலும் சிவாஜியின் தலையீடால்தான் அவர்களது காதல் பிரிந்தது என்றும் ஒரு பேச்சு உண்டு.

வெறி பிடித்து அலைந்தார்கள்: இந்நிலையில் பிரபுவுக்கும் குஷ்பூவுக்கும் திருமணமே நடந்துவிட்டதாக டாக்டர் காந்தராஜ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். 80களில் சினிமாவில் நடந்த விஷயங்களை பேசி யூட்யூபில் பிரபலமாகியிருக்கும் அவர் இதுகுறித்து அளித்த பேட்டி ஒன்றில், "குஷ்பூவுக்கு கோயில் கட்டும் அளவுக்கு நம்ம ஊர்க்காரர்கள் வெறிப்பிடித்து அலைந்தார்கள். ரஜினிகாந்த்தே கொண்டையில் தாழம்பு கூடையில் என்ன பூ குஷ்பூ என்று பாடும் நிலைமைக்கு சென்றார்.

திருமணம்?: பிரபு - குஷ்பூ காதல் தலைப்பு செய்தியாக வரும் அளவு இருந்தது. காதல் என்றுகூட தலைப்பு செய்தி போடவில்லை. இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்றே ஒரு பத்திரிகை தலைப்பு செய்தி போட்டுவிட்டது. அதன் பிறகு பெரிய ரகளையே ஆனது. அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள்கூட வெளியாகின. அன்றைய பத்திரிகைகளில் அது ரொம்பவே பிரபலம்.

பிரபுவுக்கு குழந்தைகள்: அந்த விஷயம் எழுந்தபோது பிரபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்தார்கள். இருவரும் இணைந்து நடித்த படங்கள் பயங்கர ஹிட்டடித்தன. குஷ்பூவுக்கு பெரிய டிமாண்டே தமிழ் சினிமாவில் இருந்தது. அந்த நேரத்தில் அவர்களுக்கான திருமணம் நடந்தது. இருவருக்கும் நடந்த திருமணத்துக்கு பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.

அதற்கு மேல் போகக்கூடாது. அதற்குள் போனால் அது அவர்களின் சொந்த விஷயம். பிரபு - குஷ்பூ காதல்வரைதான் பொது விஷயம். அது முறிந்ததற்கான காரணம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனஸ்தாபம் என்றால் அதுகுறித்து நாம் பேசலாம். ஆனால் குடும்பத்துக்குள் நடந்த விஷயங்களை நாம் பேசக்கூடாது. ஏனெனில் பிரபுவும் குஷ்பூவும்தான் சினிமாக்காரர்கள். பிரபுவின் மனைவி சினிமாக்காரர் இல்லை. இருவருக்கும் திருமணம் என்று தலைப்பு செய்தி போட்ட பத்திரிகையே அவர்களாக கொடுத்துதான் நாங்கள் இதை போட்டோம் என்று விளக்கமும் கொடுத்தார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X