2 முறை விவாகரத்து..பீல்ட் அவுட்டான அம்பிகா.. எம்ஜிஆரால் அந்த 7 நாட்கள் படத்திற்கு வந்த சிக்கல்!
சென்னை: 80களில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. இவர், தமிழ் , கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி, பிரபு, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அம்பிகா குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டு காணாமல் போனார்.

அவர் குறித்து டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நடிகை அம்பிகா: குடும்பபாங்கான முகம் கொண்ட அம்பிகா ஒரு சாதாரண படத்தில் தான் தமிழில் அறிமுகம் ஆனார். அவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால், அது பாக்யராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் திரைப்படம் தான். இந்த படத்தின் தயாரிப்பில் பின் இருந்தவர் ஆர்.எம். வீரப்பன் என்பதால், இந்த படத்தைப் பார்த்த எம்ஜிஆர் தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து, அந்த படத்தையே தடைசெய்து விடவேண்டும் என்ற அளவுக்கு ஆர்.எம். வீரப்பன் மீது கோபத்தில் இருந்தார். இந்த கோபத்திற்கு காரணம் அந்த படத்தில் பாக்யராஜ் மலையாளியாக நடித்திருப்பார்.
வாய்ப்பு குறைந்தது: இதையடுத்து வெள்ளை ரோஜா, வாழ்க்கை, விக்ரம், காக்கி சட்டை, காதல் பரிசு போன்ற படங்களில் நடித்தார். காதல் பரிசு படத்தில் தனது தங்கை ராதாவுடன் நடித்தார். அந்த படத்தில் அம்பிகா நடிக்கும் போதே அவரது முகத்தில் வயதான தோற்றம் வந்துவிட்டது. காதல் பரிசு படம் வெளியான போது தியேட்டரில் அம்பிகாவை பார்த்து ரசிகர்கள் கிழிவி கிழவி என்று கத்தினார்கள். அந்த படத்திற்கு பிறகுதான் அவருக்கு படவாய்ப்பு குறைந்தது.

வடிவேலு அம்பிகா: அவர் பீக்கில் இருக்கும் போது விஜயகாந்துடன் நடிக்க மாட்டேன் என்று கூறினார். இவர் மட்டுமில்லை பல நடிகைகளும் அவருடன் நடிக்க மாட்டேன் என்ற சொல்லுவார்கள். பின் அவர் டாப் நடிகராக வந்தபோது, அம்பிகா விஜய்காந்திடமே சென்று படவாய்ப்பு கேட்டார். கடைசியில் அம்பிகா வடிவேலுவிடம் வாய்ப்பு கேட்டு மன்றாடி உள்ளாராம். அதன்படி இரண்டு படங்களில் வடிவேலுவுக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார். அதுமட்டுமின்றி வடிவேலு, அம்பிகா இருவரையும் இணைத்து வைத்து செய்தித்தாள்களில் கிசுகிசுவும் வந்தன.
இரண்டு முறை விவாகரத்து: அதே போல, சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது, என்.ஆர்.ஐ. பிரேம்குமார் மேனனை மணந்து அமெரிக்காவில் குடியேறினார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், 1996ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின் 2000 ஆம் ஆண்டில் நடிகர் ரவிகாந்தை மணந்தார். பின் அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2002 ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு, தனது மகள்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது சீரியலில் நடித்து வருகிறார் என்று டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











