அரசியல் பிரமுகருடன் நடிகை மீனாவிற்கு தொடர்பா? பிரபலம் சொன்ன பகீர் தகவல்!
சென்னை: பாஜகவின் அனைத்து பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா கடந்த மாதம் நீக்கப்பட்டது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், கட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. தற்போது, இவர் பாஜக எல் முருகன் குறித்தும் நடிகை மீனா குறித்தும் பல செய்திகளை கூறி வருகிறார். இது அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் டாக்டர் காந்தராஜ் இதுகுறித்து வீடியோவில் பேசி உள்ளார்.
அதில், அரசியல் எவ்வளவு கீழ்த்தனமாகிவிட்டது என்பதைத் தான் அவரின் பேச்சு காட்டுகிறது. அரசியல்வாதிகள் மட்டும் தான் நடிகைகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா, மற்றவர்கள் யாரும் நடிகைகளுடன் தொடர்பில் இல்லையா.. இல்லை அரசியல்வாதிகள் நடிகைகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஏதாவது ரூல்ஸ் இருக்கா. பாஜகவில் கே.டி.ராகவன் ஆபாச படத்தையே எடுத்தார். அந்த பெண்கள் எதாவது புகார் கொடுத்தார்களா? பாதிக்கப்பட்ட பெண்ணே இதுபற்றி புகார் கொடுக்காத போது, யாருக்கு என்ன பிரச்சனை என்று நான் கேட்டேன்.

யோக்கியன் மாதிரி பேசுறது: அதே போலத்தான் எல் முருகனுக்கு யாரோ வருகிறார்கள், உனக்கு என்ன பிரச்சனை நீ ஏன் வயிற்று எரிச்சல்படுற, உனக்கு கிடைக்கவில்லை என்று நீ அவரைப் பார்த்து பொறாமைபடுறியா என்றுத்தான் நான் கேட்பேன். ஆண்கள் எப்போதுமே அப்படித்தான் பேசுவார்கள் கிடைத்தால் அந்த பெண்ணுடன் சத்தமில்லாமல் சென்றுவிடுவார்கள், கிடைக்கவில்லை என்றால் யோக்கியன் மாதிரி பேசுவார்கள். இதற்கு எல்லாம் எல் முருகனும் நடிகை மீனாவும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படியே பதில் சொன்னால் அந்த பதிலுக்கு பதில் கேட்பார்கள் இதனால் தான் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள்.
ஆயிரம் பெண்கள் வருவார்கள்: இதெல்லாம் பார்ப்பது தான் நம்ம வேலையா, எல் முருகன் அமைச்சர் வேலையை சரியாக செய்கிறாரா என்று பார்ப்பதை விட்டு விட்டு, யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன. அவரின் அமைச்சர் பதவியை பார்த்துவிட்டு ஆயிரம் பெண்கள் வருவார்கள், ஏன் வரக்கூடாது. இது சாதாரண அலுவலகத்தில் தொடங்கி எல்லா இடத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை ஏன் அரசியலில் கொண்டு வருகிறீர்கள். இது அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம் இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இந்த பெண்ணால் அரசாங்க வேலை எதாவது பாதித்தது என்றால் குற்றம் சொல்லலாம், அதைவிட்டு அவர் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன என்று டாக்டர் காந்தராஜ் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
சலசலப்பு: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் நடத்திய பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் பங்கேற்றனர். பிரதமர் மோடி கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகை மீனாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக அந்த அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறியிருந்தனர். பாஜகவில் நடிகை மீனா இல்லாத நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அப்போதே பெரும் பேசுபொருளானது.


Click it and Unblock the Notifications











