குழந்தை பெத்துக்க முடியுமா? பொண்ணு வாழ்க்கையை கெடுக்காதீங்க.. நெப்போலியனை விளாசிய பிரபலம்!

சென்னை: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன். சினிமாவில் டாப்பில் இருந்த நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இவர்களில் நெப்போலியனின் இளைய மகன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். 25 வயதாகும் நெப்போலியன்- மகன் தனுஷ்க்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். முதலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டு இருந்தார்.

napoleon Dr Kantharaj

நெப்போலியன் மகன் தனுஷ்: நெப்போலியன் மருமகள்- அக்ஷயாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் என தெரியவந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்கும் வேலையில் நெப்போலியன் மும்முரமாக செய்து வருகிறார். இவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுத்துள்ளார். நெப்போலியன் மகனின் திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.

மருத்துவர் காந்தராஜ்: இணையத்தில் பேசு பொருளாகி உள்ள இந்த திருமணம் குறித்து டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அதில், நெப்போலியன் திமுகவின் கே.என் நேரு மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு பல திரைப்படத்தில் நடித்து நல்ல நடிகர் என பெயர் எடுத்தார். சினிமாவில் பிரபலமான பின் திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ, எம்.பியும் ஆனார். இதையடுத்து திடீரென பாஜவில் இணைந்தார். அதன்பின் ஐடியில் தொழில் கவனம் செலுத்திய அவர், டிஎல்பில் பெரிய ஐடி கம்பெனி தொடங்கி பெரிய அளவில் சம்பாதித்தார். பின் அமெரிக்காவில் போய் செட்டிலாகிவிட்டார். அதன் பின் இப்போது தான் அவரின் பெயர் பத்திரிக்கைகளில் வருகிறது.

பிறவிலேயே வரும் நோய்: நெப்போலியனின் மகன் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நோய் ஒரு ஆபத்தான நோய், ஒரு அரியவகை நோய், பரம்பரையாக வரக்கூடிய நோய் இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எதுவும் செய்ய முடியாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 அல்லது 18 வயதிலேயே இறந்துவிடுவார்கள். இவர் 25 வயது வரை இருப்பதே பெரிய சாதனை தான். இது பிறவிலேயே வரும் பிரச்சனை, இதற்காகத்தான் இப்போது கர்ப்பிணிகளுக்கு ஜெனிட்டிக் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு குழந்தை குறித்து அனைத்தையும் தெரிந்து கொள்கிறோம். இதனால் தான் இப்போது ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது குறைந்துள்ளது.

இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாது: அவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம், இந்த நோய்க்கு ஹலோபதியில் மருத்துஇல்லை. அது போல அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அவரது திருமணம் செய்து கொள்ளும் பெண், அவரின் பெற்றோர்கள் இதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். சில பெண்கள் இதுபோன்ற ஊனமுற்றவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள், சில பெண்கள் விளம்பரத்திற்காக கூட இப்படி செய்வார்கள் என்று டாக்டர் காந்தராஜ் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X