20 வருஷத்திற்கு முன் காணாமல் போன குஷ்பூ.. கோயில் எங்கே இருக்கு.. எல்லாம் பொய்.. காந்தராஜ் பேட்டி!

சென்னை: நடிகை குஷ்பூ துறையில் நுழைந்து 45 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தான் 7 வயதில் இருந்து நடிப்பதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த, தன் மீது நம்பிக்கை வைத்த, தன்னை விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி என கூறி இருந்தார். இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த காந்தராஜ்.

45 வருடத்திற்கு மேலாக சினிமா இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சினிமாவில் 45 வருடமாக குஷ்பு இருக்கிறார் என்று சொல்ல முடியாது. 20 வருடத்திற்கு முன்பே குஷ்பூ சினிமாவை விட்டு சென்று விட்டார். கடைசியாக குஷ்பு, ரஜினியுடன் அண்ணாமலை திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அவரை எந்த படத்திலும் நான் பார்த்ததே இல்லை. அண்ணாமலை படம் வந்தே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

kushboo dr kantharaj interview

நடிகை குஷ்பு: அதேபோல பலரும் குஷ்புக்கு கோயில் கட்டி இருப்பதாக சொல்கிறார்கள் இதுவரை அந்த கோயிலை நான் பார்த்ததே இல்லை. குஷ்பூ பிரபலமாக இருந்த அந்த காலத்தில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் நடிகர்கள் பின்னால் தான் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த காலகட்டத்திலேயே குஷ்புவின் கோயிலை, ஒரு பத்திரிக்கையிலும் பார்த்ததே இல்லை. எந்த ஊரில் கோவில் இருக்கு என்று கூட யாருக்கும். தெரியாது. அந்த காலத்தில் குஷ்பு பீக்கில் இருந்ததால், சினிமாக்காரர்கள் கிளப்பி விட்ட கதை தான் அது.

அவர் அரசியல்வாதி: சினிமாவை விட்டு 15 வருடத்திற்கு முன் வெளியே சென்ற ஒரு நடிகையை இப்போது நடிகை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. அவர், அரசியலுக்கு சென்று விட்டார். இப்போது அவர் ஒரு அரசியல்வாதி, அவரை முன்னாள் நடிகை என்று வேண்டுமானால் சொல்லலாம். நானும் வேட்டையாடு விளையாடு படத்தில் ஒருபடத்தில் நடித்தேன், அதற்காக நான் நடிகன், சினிமாவிற்கு வந்து 15 வருடம் ஆகிவிட்டது என்று எப்படி சொல்ல முடியும். அப்படித்தான், குஷ்பு சினிமாவில் 45 வருடம் இல்லை, அப்படி அவர் சொல்லிக்கொண்டால் சொல்லட்டும், ஆனால், தற்போது குஷ்பு ஒரு அரசியல்வாதி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X